சவுதி பட்டத்து இளவரசரின் பிரான்ஸ் பயணம்: உண்மையான நோக்கம் என்ன?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

தனக்கு ஆயுதங்கள் வழங்கும் பிரான்ஸுக்கு சவுதி இளவரசர் ஆயுத ஒப்பந்தங்கள் செய்வதற்காக வரவில்லை என்றும் அது வர்த்தக ரீதியான ஒரு சந்திப்பு என்றும் பெயர் வெளியிட விரும்பாத பிரான்ஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஒரு காலத்தில் மிகவும் கட்டுப்பாடுகள் நிறைந்த நாடு என்று அழைக்கப்பட்ட சவுதியில் பெண்களுக்கு வாகனங்கள் ஓட்டுவதற்கு உரிமை, கலை நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்தல் மற்றும் சினிமா தியேட்டர்களை அனுமதிப்பதாக உறுதியளித்தல் உட்பட பல மாற்றங்களைச் செய்து வரும் பட்டத்து இளவரசரான முகம்மது பின் சல்மான் சவுதி நாட்டின் அதிகார மையமாக செயல்பட்டு வருகிறார்.

பிரான்ஸ் சவுதியுடன் தொழில்நுட்பம், புதுப்பிக்கும் ஆற்றல், சுகாதாரம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் கைகோர்க்க உள்ளதாக தெரியவந்துள்ளது.

UNESCOவின் பாரம்பரிய பாலைவனப் பகுதி ஒன்றை உருவாக்குவதும் இத்திட்டத்தில் அடங்கும். இந்நிலையில், பிரான்ஸ் வந்துள்ள சவுதி இளவரசரை பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் Jean-Yves Le Drian மற்றும் அவரது சகாக்கள் வரவேற்றனர்.

சவுதி இளவரசரின் பிரான்ஸ் வருகைக்கு அங்குள்ள மனித உரிமைகள் அமைப்புகளின் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் ஏமன் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேரணிகள் நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அதேபோல் ஏமனில் வான்வழித் தாக்குதல்களை நிறுத்தும்படி சவுதியை வலியுறுத்தவும், அவர்கள் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானை கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்