பிரான்சில் தீவிரவாதி எப்படி தாக்குதல் நடத்தினான்? நேரில் பார்த்தவர்கள் வாக்குமூலம்

Report Print Santhan in பிரான்ஸ்
498Shares
498Shares
lankasrimarket.com

பிரான்சில் அந்த நபர் தாக்குதல் நடத்திய போது பெண் ஒருவர் இரத்தம் வழிந்த நிலையில் இருந்ததாக சம்பவத்தைக் கண்ட உணவக சர்வர் ஒருவர் கூறியுள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஒபாரா மாவட்டத்தில் மர்ம நபர் ஒருவன் அங்கிருந்த பொதுமக்களை எல்லாம் கண் மூடித்தனமாக குத்தினான்.

இதனால் ஒருவர் பலியாகிருந்த நிலையில் ஐந்து பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.

இதையடுத்து இந்த தாக்குதலை நடத்திய நபர் செச்சன்யா நாட்டைச் சேர்ந்தவர் என்றும் அவனின் பெயர் Khamzat Azimov எனவும், அகதியாக பிரான்ஸ் நாட்டில் குடியேறியவன் என்று செய்திகள் வெளியாகியது.

தாக்குதல் நடத்தியவனை அந்த இடத்திற்கு விரைந்த பொலிசார் சுட்டுக் கொன்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த சம்பவத்தை கொரியன் உணவகத்தில் இருந்த Jonathan என்ற சர்வர் பார்த்துள்ளார்.

அவர் கூறுகையில், நான் உணவகத்தில் வாடிக்கையாளர்களிடம் ஆர்டர் எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது வீதியின் உள்ளே நுழைந்த அந்த நபர் கையில் கத்தி வைத்த படி இருந்தான்.

அதன் பின் ஒரு பெண் பீதியில் உணவகத்தின் உள்ளே நுழைந்தாள், அவள் இரத்தம் வழிந்த நிலையில் இருந்தாள்.

இதைத் தொடர்ந்து நான் பார்த்த போது அந்த இளைஞன் அங்கிருந்த மக்களை தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தான், பார்ப்பதற்கு ஒரு பைத்தியக்காரன் மாதிரி இருந்தான் என்று கூறியுள்ளார்.

மேலும் மிலான் என்ற 19 வயது நபர் கூறுகையில், சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்தது, அதில் ஒரு பெண்ணுக்கு கழுத்து மற்றும் காலில் மிகவும் மோசமான காயம் இருந்தது.

இந்த சம்பவத்தை அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொலிசார் வந்துவிட்டதால், காயமடைந்தவர்களுக்கு முதலுதவி கொடுத்தனர். அதன் பின் தாக்குதல் நடத்திய நபரை பொலிசார் இரண்டு மூன்று முறை சுட்டுக் கொன்றனர் என கூறியுள்ளார்.

இந்த தாக்குதல் காரணமாக இறந்த நபருக்கு 29 வயதிருக்கும் எனவும், ஆனால் இது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை எனவும் அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்