பிரான்ஸ் நாட்டை இந்த ஆண்டு அதிகமாக தாக்கிய மின்னல்கள்: விளைவுகள் என்ன தெரியுமா?

Report Print Santhan in பிரான்ஸ்
255Shares
255Shares
lankasrimarket.com

பிரான்சில் கடந்த 2000 வருடத்திற்கு பின்னர் அதிகபட்ச மின்னல்கள் பதிவாகியுள்ளதாக பிரான்ஸ் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் வானிலை மையம் தலைநகர் பாரிஸ் உட்பட பல பகுதிகளில் கடுமையான மழை பெய்யும், புயல் எச்சரிக்கையும் விடுத்திருந்தது.

நேற்றும் மட்டும் நாட்டின் முக்கிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. தலைநகரான பாரிசில் மழை கொட்டி தீர்த்ததால், வெள்ளங்கள் சாலைகளில் ஆறுகள் போன்று ஒடின.

இதன் காரணமாக Vincennes-க்கும் Nation-க்கும் இடையேயான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. அதன் பின் வெள்ள நீர்கள் வெளியேற்றப்பட்டு போக்குவரத்து இயங்கியது.

இந்நிலையில் கடந்த மே மாதத்தில் மட்டும் பிரான்சில் பல பகுதிகளில் இதுவரை 155,000 தடவைகள் மின்னல்கள் தாக்கியுள்ளன.

இந்த மின்னல் தாக்குதல்களினால் Bordeaux திராட்சைத் தோட்டத்தில் சதவீதங்கள் முற்றிலும் அழிந்தன. அதுமட்டுமின்றி 7,100 ஹெக்டர் அளவிலான திராட்சை தோட்டங்கள் சேதமடைந்துள்ளன.

இதற்கு முன்னதாக கடந்த 2000-ஆம் ஆண்டில் 155,000 மின்னல்களுக்கு மேல் தாக்கியுள்ளன. 2009-ஆம் ஆண்டின் மே மாதத்தில் 84,000 தடவையும், இந்த எண்ணிக்கைகளை தற்போது அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

சமீபத்தில் தலைநகர் பாரீசில் உள்ள ஈபிள் டவரை மின்னல்கள் தாக்கியது தொடர்பான வீடியோ வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த மின்னல் தாக்குதல்களில், Bordeaux திராட்சைத் தோட்டத்தில் 5 வீதமானவை அழிந்துள்ளன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்