பிரான்சில் ஒன்றை ஒன்று இடித்துக்கொண்ட விமானங்கள்!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் சாள்-து-கோல் விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் ஒன்றை ஒன்று இடித்துக்கொண்டது தொடர்பான விசாரணைகள் தொடங்கியுள்ளன.

சாள்-து-கோல் விமான நிலையத்தில் Air France நிறுவனத்தின் A330 ரக விமானம், Saint-Martin நோக்கி பறப்பதற்கான ஓடுதளத்தில் சென்றுகொண்டிருந்தபோது, Delta Air நிறுவனத்தின் விமானம் பறப்பதற்கு தயாராக பின்னால் சென்றுகொண்டிருந்தது.

அப்போது திடீரென Air France விமானத்தின் இறக்கைப் பகுதியில், Delta Air விமானம் இடித்தது. ஆனால், இச்சம்பவத்தில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பான விசாரணையை Bureau d'enquete et d'analyses முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers