நாட்ரி டாம் தேவாலய தீ விபத்திற்கு இதுதான் காரணமா? தேவாலய அலுவலர் தகவல்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

நாட்ரி டாம் தேவாலய தீ விபத்திற்கு கணினியில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக இருக்கலாம் என தேவாலயத்தின் முக்கிய அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தேவாலயத்தின் முக்கிய பொறுப்புகளை கவனிக்கும் Rector என்னும் பதவி வகிக்கும் அலுவலர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

Patrick Chauvet என்னும் அந்த அலுவலர் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் உண்மையான காரணத்தை அறிய இரண்டு அல்லது மூன்று மாதங்களாவது ஆகலாம் என தெரிவித்துள்ளார்.

வியாழனன்று விசாரணை அதிகாரிகள் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறியிருந்தனர்.

நேற்று பிரான்ஸ் பத்திரிகை ஒன்று தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்திற்கு கணினியில் ஏற்பட்ட திடீர் கோளாறு அல்லது தேவாலய பழுது பார்க்கும் பணியில் பயன்படுத்தப்பட்ட தற்காலிக லிஃப்ட் தொடர்பில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்