ஒட்டுமொத்தமாக போராட்டத்தில் குதித்த பிரான்ஸ் மக்கள்! எதற்கு?

Report Print Abisha in பிரான்ஸ்
587Shares

இன்று பிரான்ஸ் முற்றிலும் முடங்கி பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஏன் முடங்கியது?

பிரதமர் எத்துவார் பிலிப்பின் ஓய்வூதிய திட்டதை எதிர்த்து மாபெரும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகின்றது.

2019ஆம் ஆண்டு கோடை காலத்தின் போது ஓய்வூதிய அதிகாரி Jean Paul delevoy இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தை உருவாக்கினார். அதன்படி ஓய்வூதிய வயது வரம்பு 64ஆக உயர்த்தப்பட்டது.

தவிர சேவைக்காலத்தை பொறுத்து ஓய்வூதியத்தின் தொகை மாறுபடும். 64வயத்திற்கு முன் ஓய்வூதியம் கோரினால் தொகை அளவு வேறுபடும் என்பன உள்ளிடவை உள்ளடங்கி இருந்தது.

முன்னதாக இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிபர் மேக்ரானின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட 60 சதவிகிதத்தினர் நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு செய்தனர். 33 சதவிகிதத்தினர் ஆதரவும், 7 சதவிகிதத்தினர் இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், இன்று இது போராட்டமான வெடித்து மக்களை சிரமத்திற்குள்ளாக்கியுள்ளது.


போராட்டத்தில் இணந்தவர்கள்

இந்த போராட்டத்தில் முதலில் அழைப்பு விடுத்தது RATP மற்றும் SNCFஆகிய நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் தொழிற்சங்கம் அமைப்பு. அதன்பின், ஆசிரியர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர், வழக்குரைஞர்கள், விமான ஊழியர்கள், மஞ்சள் மேலாடை போராட்டகாரர்கள் இணைந்துள்ளனர்.


போக்குவரத்து தடை

தொடரும் தொழிலாளர்கள் போராட்டத்தால், பொது சேவைகளில் 90 சதவிகிதம் தடைபட்டுள்ளது.

பேருந்துகள் மூன்றில் ஒன்றுமட்டுமே இயங்கி வருகின்றது. இதனால், வாடகைக்கு விடப்படும் மிதிவண்டியை பயன்டுத்தலாம் என்று நினைத்த மக்களுக்கு மீண்டு ஒரு அதிர்ச்சி செய்தி வந்துள்ளது.

அதாவது Vélib என்ற மிதிவண்டி சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. அதில், கிட்டத்தட்ட 60 நிலையங்கள் பாரிஸ் நகரத்தில் தற்போது மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்