திடீரென வானில் தோன்றிய ஒளிக்கோடு... ஏலியன் என எண்ணி திகைத்த மக்கள்: அது உண்மையில் என்ன தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் திடீரென வானில் ஒரு ஒளிக் கோடு தோன்றியதைக் கண்டு மக்கள் திகைக்க, அது ஒரு ஒளிக் கோடு அல்ல, பல விண்கலங்கள் என தெரிவித்துள்ளார் அறிவியலாளர் ஒருவர்.

அமெரிக்க தொழிலதிபரான எலான் மஸ்க் என்பவரது விண்வெளி ஆய்வுகள் மேற்கொள்ளும் நிறுவனம் SpaceX.

அந்த நிறுவனம் 60 விண்கலங்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. அந்த விண்கலங்கள்தான் வரிசையாக அமைந்து வானில் ஒளிக் கோடு போல காணப்பட்டுள்ளன.

விண்வெளி ஆராய்ச்சியாளரான Franck Selsis என்பவர் வானில் காணப்பட்ட அந்த ஒளிக்கோட்டின் படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டு, அதன் கீழ் அது குறித்த விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.

அந்த விண்கலங்கள் உண்மையில் பல நாட்கள் வானில் இருக்கும் என்றாலும், தட்பவெப்பநிலை மற்றும் மேகங்கள் ஆகியவை காரணமாக அவற்றை நம்மால் பார்க்க முடியாமல் போய்விடுகிறது என்று கூறும் Selsis, அவை தாழ்ந்த வட்டப்பாதையில் இருப்பதால், பூமிக்கு அருகில் இருப்பதால், அவற்றை நம்மால் இப்போது நன்றாகப் பார்க்க முடிகிறது என்கிறார்.

Facebook

இணைய வேகத்தை அதிகரிப்பதற்காக, 6G இணைய சேவையை அமைப்பதற்காக இந்த விண்கலங்கள் வானில் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

என்றாலும், அதிக விண்கலங்களை வானில் செலுத்துவது நல்லதல்ல என்று கூறும் Selsis, அவை நமது வானத்தை முற்றிலும் மாசு படுத்திவிடும், ஒரு அளவுக்கு மேல் போகும்போது நம்மால் நட்சத்திரங்களைப் பார்க்க முடியாமல் போய்விடும் என்று எச்சரிக்கிறார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்