நாம் இப்போது போர் களத்தில் இருக்கிறோம்... வெளியேற வேண்டாம்: பிரான்ஸ் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு

Report Print Santhan in பிரான்ஸ்

நாம் இப்போது களத்தில் இருக்கிறோம், தேவையில்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக, 1 லட்சத்து 82 ஆயிரத்து 611 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 7 ஆயிரத்து 171 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு எதிரான போர்க் களத்தில் இருப்பதாகக் கூறியுள்ள பிரான்ஸ், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பிரான்சில் 6 ஆயிரத்து 633 பேருக்கு கொரானா பாதிப்பு உள்ளது. அங்கு இதுவரை 148 பேர் உயிரிழந்துள்ளனர்.

உணவு, மருந்துகள் வாங்கச் செல்வது, பணிக்கு செல்வது, நடைப் பயிற்சி செல்வது தவிர்த்த வேறு எந்த காரணத்திற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் கூறியுள்ளார்.

குறைந்தது அடுத்த 15 நாட்களுக்கு பயணங்கள், வெளியே செல்வது பெருமளவு குறைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அவசியத் தேவைகள் தவிர்த்து வேறு எதற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், வீட்டில் இருந்து பணியாற்ற முடியாத சூழலில் மட்டும் அலுவலகம் செல்லுமாறும் மேக்ரான் கேட்டுக்கொண்டுள்ளார். வீடுகளில் விசேஷங்களுக்காக கூடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார். நாம் போர்க் களத்தில் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது என்றும் பிரான்ஸ் அதிகபர் மேக்ரான குறிப்பிட்டுள்ளார்.

கட்டுப்பாடுகளை அமல்படுத்தவும், சோதனை சாவடிகளில் கண்காணிக்கவும் ஒரு லட்சம் போலீசார் களமிறக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, இத்தாலி, ஸ்பெயினை தொடர்ந்து பிரான்சும் போக்குவரத்து, மக்கள் நடமாட்டத்தை முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

மேலும் உலக அளவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 14 ஆயிரம் பேருக்கு கொரோன பாதிப்பு தொற்றியுள்ளதாக உலகசுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவலுக்கு...

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...