அமெரிக்கா திட்டவட்டம்! கொரோனா தடுப்பூசியை உருவாக்க உலக சுகாதார நிறுவனத்துடன் சேர மாட்டோம் என அறிவிப்பு

Report Print Santhan in பிரான்ஸ்

கொரோனா வைரஸை தடுத்து நிறுத்துவதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க உலகசுகாதார நிறுவனத்துடன், சேரமாட்டோம் என்று அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் இப்போது உலகின் பல்வேறு நாடுகளை ஆட்டிப் படைத்து வருகிறது. சீனாவில் இருப்பதற்கு முன்பே கொரோனா வைரஸ் பரவிவிட்டதாக ஒரு சில தகவல்கள் கூறுகின்றன.

ஆனால், இந்த கொரோனா வைரஸ் பற்றி ஆரம்பத்தில், சீனா வாய் திறக்கவே இல்லை. சீனாவுடன் உலக சுகாதார நிறுவனம் இணைந்து செயல்பட்டதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது.

இது தொடர்பாக மோதலால் உலக சுகாதார நிறுவனத்தின் தொடர்பை அமெரிக்க அதிலர் டிரம்ப் துண்டித்தார். அந்த அமைப்புக்கான நிதி வழங்கலையும் நிறுத்துவதாக அறிவித்தார்.

இந்நிலையில் உலகை அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ் தொற்றை தடுத்து நிறுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சி முழுவீச்சில் நடந்து வருகிறது.

உலக சுகாதார நிறுவனத்துடன் ஏறத்தாழ 170 நாடுகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. தடுப்பூசி உருவாக்கத்தை விரைவுபடுத்தவும், உற்பத்தி செய்யவும், வினியோகிக்கவும் அவை உடன்பட்டுள்ளன.

ஆனால் கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்குவதற்கும், உற்பத்தி செய்வதற்கும், சம அளவில் வினியோகிப்பதற்கும் நடந்து வருகிற உலக சுகாதார நிறுவனத்தின் முயற்சியில் சேரப்போவதில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது குறித்து வாஷிங்டன் வெள்ளை மாளிகை, இந்த வைரசை தோற்கடிப்பதை உறுதி செய்வதற்கு அமெரிக்கா தொடர்ந்து தனது சர்வதேச கூட்டாளிகளை ஈடுபடுத்தும். ஆனால் ஊழல் நிறைந்த உலக சுகாதார அமைப்புடன் சேரமாட்டோம் என தெரிவித்துள்ளது.

- Maalai Malar

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்