குப்பையில் வீசப்படும் மில்லியன் டன் உணவு... பசியால் தவிக்கும் உயிர்களை காப்பாற்றுமா ஜேர்மனி

Report Print Basu in ஜேர்மனி

ஜேர்மனியில் உணவு வீணடிப்பை தவிர்க்க குப்பை தொட்டியிலிருந்து உணவுகளை எடுப்பதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் டன் உணவு குப்பையில் வீசப்படுகிறது. இதில் பல உணவு உண்ணத்தக்கது ஆகும்.

ஜேர்மனி சட்டத்தின் படி, சூப்பர்மார்க்கெட், தொழிற்சாலை போன்ற வார்த்தக மையங்களுக்கு வெளியே உள்ள குப்பை தொட்டிகளிலிருந்து உணவு எடுத்தால் அது குற்றமாகும். அந்த உணவு உண்ணத்தக்கதாக இருந்தாலும் குற்றமே.

இந்நிலையில், ஹாம்பர்க் நகரில் குப்பை தொட்டியிலிருந்து உணவுகளை எடுப்பதை சட்டப்பூர்வமாக்கி, தற்போது உள்ள சட்டத்தை மாற்ற வேண்டும் என பசுமைக் கட்சியின் உறுப்பினரும், ஹாம்பேர்க் செனட்டில் நீதிபதி செனட் டிம் ஸ்டெஃபென் அழைப்பு விடுத்துள்ளார்.

உணவை சிறப்பாக கையாள காலதாமதமாகி விட்டது. பல மில்லியன் டன் உணவு எந்த பயனும் இல்லாமல் குப்பையில் வீசப்படுவதும், அதே சமயம் அதை எடுக்கும் மக்கள் தண்டிக்கப்படுகின்றனர்.

இச்சட்டத்தை நீக்க வேண்டும். மேலும், கடைக்காரர்கள் உணவை குப்பையில் போட தடை விதிக்க வேண்டும் என டிம் ஸ்டெஃபென் தெரிவித்துள்ளார்.

மத்திய மட்டத்தில் சட்டத்தை மாற்றுவதற்கான நம்பிக்கையில் அவர் பிராந்திய நீதி அமைச்சர்களின் மாநாட்டில் தனது திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers