நள்ளிரவில் கேட்ட பயங்கர வெடிச் சத்தம்: அலறியடித்து எழுந்த மக்கள் கண்ட காட்சி!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனி நகரம் ஒன்றில் நள்ளிரவில் குண்டு வெடித்த சத்தம் கேட்டு அலறியடித்து எழுந்த மக்கள், வயல் ஒன்றின் நடுவே 10 மீற்றர் அகலம் கொண்ட பள்ளம் ஒன்று உருவாகியிருப்பதைக் கண்டு அதிர்ந்தனர்.

Limburg நகரின் வயல் ஒன்றில் உருவான அந்த திடீர் பள்ளத்திற்கான காரணம் என்ன என்று ஆராய்ந்த பொலிசார், அது இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்ட வெடி குண்டு ஒன்று வெடித்ததால் ஏற்பட்ட பள்ளம் என்பதை கண்டறிந்தனர்.

சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் வீசப்பட்ட அந்த குண்டு இவ்வளவு காலமும் வெடிக்காமலே மண்ணில் புதையுண்டு இருந்துள்ளது.

அது எதனால் திடீரென வெடித்தது என்பது யாருக்கும் தெரியவில்லை.

ஒருவேளை ஏதாவது ட்ராக்டர் போன்ற வாகனத்தால் உழும்போது உலோக பாகம் ஏதாவது உரசியதால் அந்த வெடிகுண்டு வெடித்ததா என்றால், அதுவும் இல்லை.

அந்த வயலுக்கு அருகில் வசித்த மக்கள் வெடிகுண்டு ஒன்று வெடித்தது போன்ற பலத்த சத்தம் கேட்டதாக தெரிவித்தார்கள்.

அந்த வெடிகுண்டு வெடித்ததால் 10 மீற்றர் அகலமும் 4 மீற்றர் ஆழமும் கொண்ட பெரிய பள்ளம் ஒன்று உருவாகியுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers