ஜேர்மனியின் பொருளாதாரத்தில் அடித்த புயல்..! ஏஞ்சலா மெர்க்கலின் கருத்து என்ன?

Report Print Kabilan in ஜேர்மனி

ஐரோப்பிய பங்குச்சந்தையில் ஜேர்மனியின் பங்கு கணிசமாக குறைந்துள்ளது, பொருளாதார மந்தநிலையை வெளிப்படையாக காட்டும் வகையில் அமைந்துள்ளது.

ஐரோப்பிய பங்குச் சந்தைகள் இன்று காலை திறக்கப்பட்டன. அப்போது ஜேர்மனியின் DAX 0.4pc ஆக குறைந்திருந்தது. உலகளாவிய பதட்டங்கள், அதன் ஏற்றுமதி உந்துதல் உற்பத்தித் துறையில் அழுத்தம் கொடுப்பதால், ஜூன் முதல் மூன்று மாதங்களில் சுருங்கிய பின்னர், ஜேர்மனியின் பொருளாதாரம் மந்தநிலைக்கு பாதியிலேயே உள்ளது.

மாநில புள்ளிவிவர அலுவலகமான டெஸ்டாடிஸ் ‘பொருளாதார செயல்திறனில் சிறிதளவு சரிவு’ என்று அழைத்தைத் தொடர்ந்து, இரண்டாவது காலாண்டில், ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரம் 0.1pc ஆக சுருங்கியது.

கடந்த ஆண்டில் ஜேர்மனியின் பொருளாதாரம் வெறும் 0.4 சதவிதம் மட்டுமே வளர்ந்திருந்தது, சமீபத்திய ஆண்டுகளில் மிக மோசமான செயல்திறன் என்று கூறப்படுகிறது. அதிலும், கடந்த 2011ஆம் ஆண்டு ஐரோப்பிய பகுதி நெருக்கடியில் இருந்து, ஜேர்மனியின் பொருளாதார உணர்வு அதன் மிகக் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக, முதலீட்டாளர்களை உன்னிப்பாக கவனித்த ஆய்வில் நேற்று கண்டறியப்பட்டது.

FABRIZIO BENSCH / REUTERS

இதற்கிடையில், பங்குச்சந்தையின் முடிவு வெளியிடப்படுவதற்கு முன்பு, ஜேர்மனியின் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் கூறுகையில், ‘ஜேர்மனியின் பொருளாதாரம் கடினமான கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. நிலைமையைப் பொறுத்து நாங்கள் செயல்படுவோம்’ என தெரிவித்தார்.

ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் (மூன்றாம் காலாண்டில்) ஜேர்மனியின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால், அது ஒரு தொழில்நுட்ப மந்தநிலைக்குள் நுழைந்ததாகக் காணப்படும். இது கடந்த ஆண்டு குறுகலாக தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வர்த்தக போரின் அச்சத்தை தளர்த்தும் வகையில், சீன ஏற்றுமதியில் சுமார் 150 பில்லியன் டொலர் கட்டணத்தை தாமதப்படுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers