ஜேர்மனி உணவு திருவிழாவின்போது வெடித்து சிதறிய எண்ணெய் சட்டி: ஒருவர் பலி, பலர் படுகாயம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் உணவு திருவிழா ஒன்றின்போது எண்ணெய் சட்டி வெடித்துச் சிதறியதில், ஒருவர் பலியானதோடு பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

நேற்று Alchen-Freudenberg என்னும் நகரில், சுமார் 150 பேர் பங்கேற்ற உணவு திருவிழாவின் போது பெரிய எண்ணெய் சட்டி ஒன்று எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியது.

இந்த கோர சம்பவத்தில் படுகாயமடைந்த ஒரு பெண் பரிதாபமாக பலியானதோடு, மேலும் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் ஐந்து பேரின் நிலைமை மோசமாக உள்ளது. அவர்களில் நால்வருக்கு சூடான எண்ணெய் உடலில் பட்டதால் காயம் ஏற்பட்டுள்ளது, ஒருவருக்கு சம்பவத்தின்போது மாரடைப்பு ஏற்பட்டது.

ஹெலிகொப்டர் உதவியுடன் அவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.

சம்பவ இடத்திலேயே 14 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

எதனால் இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது தெரியாத நிலையில், பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

திருவிழாவின்போது மழை பெய்து கொண்டிருந்ததால், சூடான எண்ணெயில் மழை நீர் தெறித்ததால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers