வீட்டை காலி செய்ய சொன்ன வீட்டு உரிமையாளர்: வீட்டையே வெடிக்க செய்த பெண்கள்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

வீட்டை காலி செய்ய சொன்ன உரிமையாளரை பழி வாங்குவதற்காக வீட்டையே வெடிக்கச் செய்த இரண்டு பெண்கள் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜேர்மனியிலுள்ள Muenster நகருக்கருகிலுள்ள ஒரு வீட்டில் 67 வயதுள்ள ஒரு பெண்ணும் 38 வயதுள்ள அவரது மகளும் வசித்து வந்திருக்கிறார்கள்.

அவர்களுக்கும் அந்த வீட்டின் உரிமையாளருக்கும் நீண்ட காலமாகவே பிரச்சினை இருந்துவந்துள்ள நிலையில், அவர்களை வீட்டைக்காலி செய்யவைப்பதற்காக, நீதிமன்ற உத்தரவுடன் அலுவலர் ஒருவரும் பொலிசாரும் வந்துள்ளனர்.

இதை அறிந்த அந்த பெண்கள் இருவரும், வீட்டை வெடிக்கச்செய்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து, எரிவாயு குழாயை சேதப்படுத்தியுள்ளனர்.

Bernd Thissen/dpa via AP)

வீடு வெடித்துச் சிதறியதில் அவர்கள் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அவர்கள் உயிர் தப்பிவிட்டார்கள்.

ஆனால், அங்கு வந்த பொலிசார் மூவருக்கு காயங்கள் ஏற்பட்டன. அத்துடன் அவர்கள் வளர்த்துவந்த இரண்டு குதிரைகள் தீயில் படுகாயமடைந்ததையடுத்து, அவைகளை கருணைக்கொலை செய்ய நேரிட்டது.

அந்த வீடு மொத்தமாக எரிந்து நாசமாகிவிட்ட நிலையில், எரிவாயுக்குழாயை சேதப்படுத்தி வீட்டைக் கொளுத்துவதால், தங்களுக்கும் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பது தெரிந்தும் அவர்கள் அவ்வாறு செய்ததால் அவர்கள் மீது கொலை முயற்சிக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்