கொரோனா குறித்து அறியாத ஜேர்மன் பிக் பாஸ் பிரபலங்கள்: நேரலையில் தெரியவந்த தகவலால் கதறி அழுகை!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

நம் ஊரில் பிக் பாஸ் போல ஜேர்மனியில் நடத்தப்படும் பிக் பிரதர் என்ற நிகழ்ச்சிக்காக பிரபலங்கள் சிலர் ஒரு வீடு ஒன்றிற்குள் அடைந்து கிடந்தனர்.

ஆகையால் அவர்களுக்கு கொரோனா தொற்று பரவியது குறித்து எதுவுமே தெரியாது. ஆண்களும் பெண்களுமாக 14 பேர் அந்த வீட்டிற்குள் அடைந்திருந்த நிலையில், சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்ததையடுத்து கொரோனா குறித்து அவர்களுக்கு சொல்ல முடிவு செய்யப்பட்டது.

அவர்கள் வீட்டிற்குள் சென்று ஒரு மாதம் ஆகிவிட்டதால், வெளி உலகில் என்ன நடக்கிறது என்பதே அவர்களுக்கு தெரியாது.

இதற்கிடையில் ஜேர்மனியில் 6,000 பேருக்கு கொரோனா தொற்றியதோடு 13 பேர் உயிரிழந்தும் விட்டனர்.

இந்நிலையில், கொரோனா பரவியது குறித்த ஒரு வீடியோ அவர்களுக்கு காட்டப்பட்டது. அதைக்கண்ட சிலர் கண்ணீர் விட ஆரம்பித்தார்கள்.. பின்னர் அவர்களது உறவினர்கள் அனுப்பிய வீடியோ செய்திகள் அவர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

ஒரு பெண்ணின் தாய்க்கு ஏற்கனவே நுரையீரல் பிரச்சினை உள்ளதால், அவர் தன் தாயைக் குறித்து எண்ணி கதறியழ ஆரம்பித்துவிட்டார்.

ஆனால், உறவினர்கள் பிக் பிரதர் பிரபலங்களை ஜோக்கடித்து உற்சாகப்படுத்த முயன்றனர்.

ஜேர்மனியிலேயே நீங்கள்தான் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று கூறிய பிக் பிரதர் போட்டியாளர்களின் உறவினர்கள், வீடு திரும்பும்போது எப்படியாவது கொஞ்சம் டாய்லெட் பேப்பர்களை மட்டும் எடுத்துவந்துவிடுங்கள் என்று கூற, போட்டியாளர்களால் சிரிப்பை அடக்கமுடியவில்லை.


மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்