நீங்க உறங்க பயன்படுத்தும் விரிப்பு என்ன? அவற்றின் குணம் இதுதான்

Report Print Printha in ஆரோக்கியம்

உறங்குவதற்கு நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு விதமான விரிப்புகளுக்கும் ஒவ்வொரு குணங்கள் உண்டு. அவைகள் இதோ,

கோரைப்பாய்

கோரைப்பாயில் படுத்து உறங்கினால் உடல் சூடு, மந்தம், விஷசுரம், ஆகிய பிரச்சனைகள் நீங்கி, உடல் குளிர்ச்சி அடைந்து நல்ல உறக்கம் வரும்.

கம்பளி விரிப்பு

கடும் குளிருக்கு கம்பளி விரிப்புகளை பயன்படுத்தினால், அது நம் உடலுக்கு சூட்டை அளித்து குளிர் காய்ச்சல் வராமல் தடுக்கும்.

பிரம்பம் பாய்

பிரம்பம் பாய் கொண்டு உறங்கினால் சீதபேதி மற்றும் காய்ச்சல் ஆகியவை நீங்கும்.

ஈச்சம்பாய்

ஈச்சம் பாயில் படுத்து உறங்கினால் வாதநோய் குணமாகும்.

தாழம்பாய்

தாழம்பாயில் உறங்கினால் வாந்தி, தலை சுற்றல் மற்றும் பித்தம் ஆகிய பிரச்சனைகள் நீங்கும்.

பனை ஓலைப்பாய்

பனை ஓலைப்பாயை படுப்பதற்கு பயன்படுத்தினால், அது பித்தம் மற்றும் உடல் சூட்டை நீக்கி ஆரோக்கியம் தரும்.

தென்ன ஓலை

தென்னை ஓலையில் செய்யப்படும் பாயில் படுத்து உறங்குவதால், அது உடலின் சூட்டை சமன்படுத்தி, அறிவுத் தெளிவை அதிகமாக்கும்.

மலர் படுக்கை

மலர்களினால் செய்யப்பட்ட படுக்கை விரிப்பில் உறங்கினால் ஆண்மை அதிகரிக்கும், நன்றாக பசி எடுக்கும்.

இலவம் பஞ்சு மெத்தை

இலவம் மரத்தின் பஞ்சினால் உருவாக்கப்பட்ட மெத்தையில் படுத்து உறங்கினால் உடலில் ரத்தம், தாது பலம் பெறும். மேலும் உடலில் தோன்றும் அனைத்து நோய்களும் குணமாகும்.

படுக்கும் முறைகள் குறித்து சான்றோர்கள் கூறியது?
  • சொந்த வீட்டில் கிழக்கு திசையில் தலை வைத்து, மேற்கு திசையில் கால்நீட்டி படுக்க வேண்டும்.
  • மாமனார் வீட்டில் தூங்கும் போது தெற்கு திசையில் தலை வைத்து தூங்க வேண்டும்.
  • வெளியூரில் தங்கும் போது மேற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும்.
  • உறங்கும் போது இடது பக்கமாக சாய்ந்து இடது கையை தலைக்கு அடியில் வைத்து கால்களை நேராக நீட்டி தூங்குவதே சிறந்த முறை.
  • ஆனால் எப்போதும் வடக்கு திசையில் மட்டும் தலை வைத்து படுக்கக் கூடாது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்