கற்றாழை ஜெல்லை மலச்சிக்கலுக்கு பயன்படுத்தலாம்: எப்படி தெரியுமா?

Report Print Printha in ஆரோக்கியம்

கற்றாழையின் இலையிலிருந்து எடுக்கப்படும் ஜெல் அழகு சாதனப் பொட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் தயாரிப்பதில் பயன்படுகிறது.

திரவம் போன்ற கற்றாழையின் ஜெல் கசப்பு தன்மை கொண்டிருந்தாலும், அனைத்து அழகு மற்றும் உடல்நலக் கோளாறு சார்ந்த பிரச்சனைகளுக்கு கூடுதல் பலன் அளிக்கும் இயற்கை பொருளாக விளங்குகிறது.

கற்றாழையை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?

கற்றாழையை நன்றாகத் தோல் சீவி நீரில் கழுவிய பின் அதனுடன் தேன் அல்லது பனைவெல்லம் சேர்த்து, அரைத்து ஜூஸாக சாப்பிட்டால், மாதவிடாய் வயிற்று வலி குறையும்.

கற்றாழை ஜெல்லை எடுத்து தோலில் அரிப்பு உள்ள இடத்தில் தடவி வர தோல் அரிப்பு, கரும்புள்ளி, சுருக்கம், முகப்பருக்கள் மற்றும் அழற்சிகள் நீங்கும்.

வெயில் காலங்களில் அடிக்கடி கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தி முகம், கை, கால்களைக் கழுவினால், சூரிய ஒளிக்கதிரின் மூலம் ஏற்படும் பிரச்சனையை தடுக்கலாம்.

கற்றாழை ஜெல்லோடு தேன் சேர்த்து வாரத்துக்கு ஒருமுறை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், முகம் பொலிவடையும்.

கற்றாழையின் சதைப் பகுதியை தண்ணீரில் நன்றாகக் கழுவி அதை உதட்டில் தடவ உதடு வறண்டு போகாமல் இருக்கும்.

முகத்தில் உள்ள கரும்புள்ளி தழும்புகள், வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் போன்ற சருமநோய் எதுவாக இருந்தாலும் கற்றாழைச் சாறை தினமும் தடவி வர குணமாகும்.

நாள்பட்ட மலச்சிக்கல், வாய்வுத் தொல்லை, வயிற்று உஷ்ணம், தீராத வயிற்று புண் போன்ற பிரச்சனைகளை போக்க கற்றாழையின் ஜெல்லை ஜூஸ் செய்து குடிக்கலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers