நாக்கில் படியும் மஞ்சள் நிறத்தை போக்க டிப்ஸ்

Report Print Printha in ஆரோக்கியம்
175Shares
175Shares
ibctamil.com

வாயின் ஆரோக்கியத்தில் குறைபாடு உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் நாக்கின் மேற்புறத்தில் வெள்ளையாக ஒரு படலம் சூழ்ந்திருக்கும்.

நாக்கில் மேலே இருக்கும் வெள்ளைப்படலம் பாக்டீரியாக்கள், இறந்த செல்கள் போன்றவை நாக்கில் தங்கி இருப்பதால் உருவாகிறது. இதனால் கடுமையான வாய் துர்நாற்றம் உண்டாகும்.

நாக்கில் உள்ள மஞ்சள் நிறத்தை போக்குவது எப்படி?
  • பற்களை தினந்தோறும் 2 முறை துலக்குவதுடன், நாக்குகளையும் தினமும் சுத்தம் செய்ய வேண்டும்.
  • தினமும் உடலுக்கு போதிய அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். அதனால் நாக்கில் வெள்ளைப்படலம் வராமல் தடுக்கலாம்.
  • 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1/2 டேபிள் ஸ்பூன் உப்பு கலந்து, அந்த நீரை வாயில் ஊற்றி கொப்பளிக்க வேண்டும். இதை தினமும் காலை மற்றும் இரவில் படுக்கும் முன் செய்ய வேண்டும்.
  • சர்க்கரை கலந்த பொருட்களில் ஆபத்தான பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளது. எனவே அதிகம் சர்க்கரை பொருட்களை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
  • தினமும் பற்களை துலக்கிய பின், சிறிது உப்பை நாக்கில் தூவி மென்மையான பிரஷ் கொண்டு தேய்த்தால், நாக்கில் தங்கியுள்ள பாக்டீரியாக்களை நீங்கிவிடும்.
  • தினமும் ஒரு டம்ளர் தண்ணீரில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து குடிக்க வேண்டும் அல்லது நாக்கில் தேனை தடவி வரலாம்.
  • தினமும் இரவில் படுக்கும் முன், நாக்கை சுத்தம் செய்து தயிரை நாக்கில் தடவிக் கொண்டால், நாக்கில் பாக்டீரியாவின் தாக்கம் வராமல் தடுக்கலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்