எலும்புகள் வலிமையாக ஆகணுமா? அப்ப இதை சாப்பிட்டால் போதுமே

Report Print Raju Raju in ஆரோக்கியம்

உடலில் உள்ள எலும்புகள் ஆரோக்கியமாக இருந்தால் தான் நம்மால் நடக்கவோ, நகரவோ முடியும்.

பொதுவாக எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் சத்து அவசியமானது, வயது அதிகரிக்கும் போது கால்சியம் சத்துக்கள் உடலில் குறைய தொடங்கும்.

எலும்புகளின் வலிமைக்கு ஒரு நாளைக்கு 700 மிகி கால்சியம் அவசியமானது.

சில முக்கிய உணவுகளை சாப்பிட்டால் அது உடல் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும்.

பால்

கால்சியம் நிறைந்த பொருளான பாலில் பாஸ்பரஸ், ரிபோஃப்ளேவின், வைட்டமின் டி மற்றும் மக்னீசியம் போன்ற பல்வேறு அத்தியாவசியமான சத்துக்கள் அடங்கியுள்ளன

பெரியவர்கள் 2 டம்ளர் பால் குடிக்க வேண்டியது அவசியம். குழந்தைகள் மற்றும் டீன்-ஏஜ் வயதினர் இன்னும் அதிகமான அளவில் பாலைக் குடித்தால் எலும்புகள் வலுபெறும்.

தயிர்

தயிரில் எலும்புகளை வலிமையாக்கும் சத்துக்களான வைட்டமின் பி6, 12, கால்சியம் மற்றும் புரோட்டீன்களும் அடங்கியுள்ளது.

கொழுப்பு நீக்கப்பட்ட தயிரை சாப்பிடுவது நலம் பெயர்க்கும்.

எள்ளு விதைகள்

மக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்களான பி1, கே மற்றும் டி போன்ற அத்தியாவசிய சத்துக்கள் எள்ளு விதைகளில் அடங்கியுள்ளது.

மேலும் எள்ளு விதைகளில் எலும்புகளின் அடர்த்திக்கு தேவையான ஜிங்க் சத்தும் அடங்கியுள்ளது.

இந்த எள்ளு விதைகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

கொலார்டு கீரை

கொலார்டு கீரைகளில் எலும்புகளின் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின் கே, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், மக்னீசியம் போன்றவை உள்ளன.

இதோடு நார்ச்சத்து, வைட்டமின் டி மற்றும் ஏ போன்ற சத்துக்களும் இதில் அடங்கியுள்ளது.

பசலைக்கீரை

பசலைக்கீரையில் கால்சியம் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. மேலும் இதில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மக்னீசியம் போன்றவைகளும் உள்ளது. இவை அனைத்துமே எலும்புகளை வலிமையாக்கும்.

வெள்ளை பீன்ஸ்

வெள்ளை பீன்ஸில் எலும்புகளை இறுக்கும் கால்சியம் மட்டுமின்றி, வளமான அளவில் புரோட்டீன், நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீசியம் சத்துக்களும் அடங்கியுள்ளது.

ஈரல்

ஈரவில் வைட்டமின் ஏ, டி போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் உள்ள வைட்டமின் ஏ ஈறு நோய்களைத் தடுக்கும். அதேப்போல் வைட்டமின் டி கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவியாக இருக்கும்.

மத்தி மீன்

மத்தி மீனில் பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின் டி போன்ற எலும்புகளை வலிமையாக்கும் சத்துக்கள் உள்ளது. ஆகவே எலும்புகளை வலிமையாக்க நினைத்தால மத்தி மீன்களை அடிக்கடி சாப்பிடலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்