தினமும் ஒரு கையளவு கருப்பு திராட்சை: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்

Report Print Arbin Arbin in ஆரோக்கியம்

திராட்சையில் சர்க்கரை, வைட்டமின் டி மற்றும் அற்புதமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இதனை ஒருவர் சாப்பிட்டால், உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைப்பதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையும் அதிகரிக்கும்.

இதில் கருப்பு நிற திராட்சையை ஒருவர் அன்றாடம் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

கருப்பு திராட்சை முதுமையில் தாக்கும் அல்சைமர் நோயில் இருந்து பாதுகாக்கும். இதற்கு இதில் உள்ள பாலிஃபீனால்கள் தான் காரணம்.

கருப்பு திராட்சை மிகவும் சிக்கலான நோய்களான மார்பக புற்றுநோய் மற்றும் இதர வகை புற்றுநோய்களையும் எதிர்த்துப் போராடி, உடலுக்கு பாதுகாப்பை அளிக்கும். கருப்பு திராட்சையில் உள்ள வளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் காரணம்.

கருப்பு திராட்சையை ஒருவர் தினமும் சாப்பிட்டு வந்தால், அது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

கருப்பு திராட்சையை தினமும் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால், அது யூரிக் அமில அளவைக் குறைத்து, சிறுநீரகங்களில் கொடுக்கப்படும் அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும்.

கருப்பு நிற திராட்சையில் உள்ள அதிகளவிலான சர்க்கரை, செல்லுலோஸ் மற்றும் ஆர்கானிக் அமிலம் போன்றவை அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுத்து, கழிவுகள் எளிதில் உடலில் இருந்து வெளியேற உதவும்.

கருப்பு திராட்சையில் உள்ள அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான ரிபோஃப்ளேவின், நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தி, அடிக்கடி வரும் ஒற்றைத் தலைவலியில் இருந்து விடுவிக்கும்.

கருப்பு திராட்சையில் உள்ள ஜியாஜாந்தின் மற்றம் லுடின் போன்றவை கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

கருப்பு திராட்சையை ஒருவர் அன்றாடம் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள வளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஆன்டி-ஏஜிங் பொருள் போன்று செயல்பட்டு, சரும செல்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

கருப்பு திராட்சை பொடுகுத் தொல்லையில் இருந்து விடுவிக்கும். கருப்பு திராட்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் தான், பொடுகை நீக்கி, தலைமுடியை பட்டுப் போன்று, மென்மையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers