மார்பக புற்றுநோயிலிருந்து மாதுளை உங்களை பாதுகாக்கும் என்று தெரியுமா?

Report Print Arbin Arbin in ஆரோக்கியம்
53Shares
53Shares
lankasrimarket.com

மாதுளம் பழம் சாப்பிட்டால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும் என்ற கருத்து பரவலாக நிலவி வருகிறது.

ஆனால் அதன் மற்ற பயன்கள் குறிப்பாக மாதுளை மார்பக புற்றுநோயை கட்டுப்படுத்தக்கூடும் என்பது பலரும் அறியாத ஒன்று.

தினமும் 8 அவுன்ஸ் மாதுளை ஜூஸ் குடிப்பது உங்கள் உடல் எடை அதிகரிப்பதை குறைக்கும். அதுமட்டுமின்றி உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளையும் கரைக்கிறது.

மாதுளையின் மற்றொரு முக்கிய பயன் இதயத்தை பாதுகாப்பது. இது இதயம் மற்றும் தமனிகளை பாதுகாக்கிறது.

மாதுளம் பழத்தில் உள்ள பைட்டோகெமிக்கல்ஸ் மார்பக புற்றுநோயை வராமல் தடுக்கவும் மேலும் மேலும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை குறைக்கவும் உதவுகிறது.

மாதுளையில் உள்ள பாலிபினால் மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதன் மூலம் நினைவாற்றலை அதிகரிக்கிறது. மாதுளை இன்சுலின் எதிர்ப்பு மற்றும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது.

மாதுளை சிறந்த ஆக்சிஜனேற்றியாக பயன்படுவதுடன் ஆக்சிடேடிவ் அழுத்தத்தையும் குறைக்கிறது. ஆக்சிடேடிவ் அழுத்தம் என்பது ஆண்களின் விரைப்புத் தன்மை பெண்கள் கருவுறுதல் வாய்ப்புகளை குறைக்க கூடியயதாகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்