தினமும் காலையில் இதை செய்திடுங்கள்! பல நோய்களை குணப்படுத்தலாம்

Report Print Jayapradha in ஆரோக்கியம்

ஒரு நல்ல நாளின் தொடக்கம் அந்நாளை நாம் ஆரம்பிக்கும் விதத்தில் தான் உள்ளது. அதாவது, காலையில் எழுந்ததும் சிறிது உடற்பயிற்சி, யோகாசனம் ஆகியவை செய்யும் போது மனம் அமைதியாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.

மேலும் உடலின் ஆரோக்கியம் என்பது அன்றைய நாளில் நாம் சாப்பிடும் உணவு முறையைப் பொறுத்து அமையும்.

உடலில் உள்ள சில பிரச்சனைகளை சரிசெய்ய உதவும் நீரில் கலந்து குடிக்கக்கூடிய சில பொருட்களைப் பற்றியும், அவற்றை குடிப்பதால் ஏற்படக்கூடிய நன்மை பற்றியும் பார்க்கலாம்.

வெந்தயம் கலந்த நீர்

இரவு தூங்குவதற்கு முன்பு வெந்தயத்தை தண்ணீரில் போட்டு ஊற வைத்து விட்டு தூங்குங்கள். காலை எழுந்ததும் அந்த நீரை குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்துவிடும்.

கொத்தமல்லி விதை கலந்த நீர்

ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். இது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த மிகவும் உதவும்.

அருகம்புல் தண்ணீர்

ஒரு டீஸ்பூன் அருகம்புல் பொடியை நீரில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதை குடிப்பதால் உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் வெளியேறி, கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தும்.

உருளைக்கிழங்கு நீர்

சில உருளைக்கிழங்கு துண்டுகளை ஒரு டம்ளர் நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதை குடிப்பதால் உடலில் ஆற்றல் அதிகரித்து நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.

ஓமம் கலந்த நீர்

ஒரு டீஸ்பூன் ஓமத்தை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து, இரவு முழுவதும் ஓற வைத்து காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

இதை தினமும் குடிப்பதால் உடலில் உள்ள செரிமான பிரச்சனைகள் சரி செய்யும். மேலும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படக்கூடிய வலியை போக்கும்.

சீரகம் கலந்த நீர்

ஒரு டம்ளர் நீரில் சீரகத்தை போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். காலையில் எழுந்து அந்த நீரை வடிகட்டி குடிக்க வேண்டும்.

பார்லி கலந்த நீர்

ஒரு டீஸ்பூள் பார்லியை 1 1/2 கப் தண்ணீரில் சேர்த்து 1 டம்ளராகும் வரை சுண்ட காய்ச்ச வேண்டும். காய்ச்சிய நீரை இரவு முழுவதும் அப்படியே வைத்து விட்டு காலை எழுந்து வடிகட்டி குடிக்க வேண்டும்.

இது உடலில் சிறுநீரை பெருக்கி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற மிகவும் உதவும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்