கடுமையான வயிற்று வலியால் அவதியா? அப்போ இந்த அற்புத ஜூஸை குடிங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

ஆரோக்கியமற்ற உணவுகள், உடற்பயிற்சியின்மை, அல்சர், உணவை தவிர்த்தல், நேரம் தவறி சாப்பிடுதல் போன்ற பிரச்சினையால் வயிற்றில் அதிகப்படியான ஆசிட் உருவாகி வாயுப் பிரச்சினை, வயிற்றெரிச்சல் மற்றும் வயிற்று வலி போன்றவை ஏற்படுத்தி விடுகின்றது.

இதனால் பலரும் பெரும் அவஸ்தைக்குள்ளாகுவதுண்டு.

இதற்காக ஆன்டாசிட் மாத்திரைகள் அல்லது வலி நிவாரண மாத்திரைகளை எடுப்பதுண்டு. இதனால் நிறைய பக்க விளைவுகள் ஏற்படலாம்.

இதற்காக நாம் ஆரோக்கியமான முறையில் வயிற்று வலியில் இருந்து விடுபட ஓர் அற்புத ஜூஸை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • பூசணிக்காய் ஜூஸ் - 1/2 டம்ளர்
  • ஆப்பிள் சிடார் வினிகர் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை சரியான அளவில் கலந்து ஜூஸ் தயாரித்து கொள்ளவும்.

இந்த ஜூஸை நீங்கள் எப்பொழுது எல்லாம் வாயுப் பிரச்சினையால் அவதிப்படும் போது குடிக்கவும். கண்டிப்பாக நல்ல பலனை காணலாம் .

இந்த முறை கண்டிப்பாக உங்கள் வாயுப் பிரச்சினை மற்றும் வயிற்று வலியை குணமாக்கும்.

இதனுடன் ஆரோக்கியமான உணவுகள், வாயுவை உருவாக்கும் உணவை தவிர்த்தல் மற்றும் நல்ல உடற்பயிற்சி இவற்றை மேற்கொண்டால் கூடுதல் பலன் கிடைக்கும்.

நன்மைகள்

பூசணிக்காய் ஒரு இயற்கை அல்கலைன் ஆகும். எனவே இது உங்கள் வயிற்றில் உள்ள ஆசிட் அளவை குறைத்து உடனே வயிற்று வலியிலிருந்து நிவாரணம் தருகிறது.

ஆப்பிள் சிடர் வினிகர் வயிற்றில் அமிலத்தன்மையை நடுநிலையாக்கி வயிற்றெரிச்சல், வயிற்று வலி மற்றும் வாயுப் பிரச்சினையை சரி செய்கிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers