1 மணி நேரம் பற்களை அலுமினியத்தாள் கொண்டு மூடினால் என்ன நடக்கும்ன்னு தெரியுமா?

Report Print Nalini in ஆரோக்கியம்

பலரும் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்க பல வழிகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

அதில் சிலர் பணம் செலவழித்து பல் மருத்துவரிடம் பற்களை சுத்தம் செய்து கொள்வார்கள். பலர் எப்போதும் போன்று டூத் பேஸ்ட்டுகளைப் பயன்படுத்தி வருவார்கள்.

பொதுவாக பற்களை வெண்மையாக்குவதற்கு விற்கப்படும் பேஸ்ட்டுகளில் கார்பமைடு பெராக்ஸைடு மற்றும் சிறிய துகள்கள் பற்களின் எனாமலை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் பற்களை வெண்மையாக்க பல இயற்கை வழிகளும் இருக்கிறது. அது என்னவென்று பார்ப்போம்.

பற்களை வெள்ளையாக்குவதற்கு ஓர் நேச்சுரல் டூத் பேஸ்ட்டும், அலுமினியத்தாளும் அவசியம்.

தேவையான பொருட்கள்
  • பேக்கிங் சோடா – 1/2 டீஸ்பூன்
  • உப்பு – 1/2 டீஸ்பூன்
  • தண்ணீர் – சிறிது
  • அலுமினியத்தாள்
செய்யும் முறை

பேக்கிங் சோடா, உப்பு மற்றும் நீரை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை பற்களில் தடவிக் கொள்ள வேண்டும்.

அலுமினியத்தாள் பின் படத்தில் காட்டியவாறு அலுமினியத்தாளைக் கொண்டு பற்களை மூடி, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

1 மணிநேரம் கழித்து, டூத் பிரஷ் கொண்டு பற்களை மென்மையாக தேய்த்து, குளிர்ந்த நீரில் நன்கு வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

இந்த முறையை மாதத்திற்கு 2 முறைக்கு மேல் செய்ய வேண்டாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்