பித்தப்பை கல் இருப்பவர்கள் தப்பி தவறி கூட இந்த 5 வகை உணவுகளை சாப்பிடவே கூடாதாம்! உஷாரா இருங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்
2719Shares

சிறுநீரகக் கற்களுக்கு அடுத்தபடியாகப் பித்தப்பைக் கல்தான் அதிகம் பேருக்குத் தொல்லை தரக்கூடியது.

முக்கியமாக கொழுப்பு அதிகம் உள்ள உணவு உண்பதால் பித்தப்பையில் கல் உருவாகிறது.

இதன் அறிகுறி வலது நெஞ்சில் வலி, நேர் பின்னே முதுகில் வலி, வலது தோளிலிருந்து உள்ளங்கை வரை வலி பரவும்.

கல்லீரலுக்கு அடியில் இருக்கும் இந்த பித்தப்பையில் கற்கள் இருந்தால், அது அடைப்பை ஏற்படுத்தி, வலி, குமட்டல், மஞ்சள் காமாலை மற்றும் அபாயகரமான தொற்று போன்ற பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

அறிகுறிகள் தீவிரம் அடைந்தால் உங்களுக்கு சில நேரங்களில் அறுவை சிகிச்சை ஏற்படலாம்

இந்த பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டும் என்றால் சில உணவுகளை தவிர்ப்பதே நல்லது. தற்போது அந்த உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • நம்முடைய பித்தப்பை ஆரோக்கியமாக இருக்க சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்ப்ஸ் உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இவை ஆரோக்கியமற்றது. மேலும் ஜீரணிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.

  • வறுத்த உணவுகளில் டிரான்ஸ் கொழுப்பு அமிலங்கள் அதிகளவில் உள்ளது. இது பித்தப்பை கற்களை உருவாக்குவதற்கு பங்களிக்கும் மற்றொரு உணவாகும்.

  • பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆரோக்கியமற்றவை. இவற்றில் சோடியம் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் அதிகளவில் காணப்படுகின்றன. எனவே உங்க பித்தப்பையை பாதுகாக்க இந்த மாதிரியான உணவுகளில் இருந்து விலகி இருப்பது நல்லது.

  • சிவப்பு இறைச்சி போன்ற உணவுகள் ஜீரணிப்பதற்கு கடினமாக இருக்கும். அந்த உணவுகளை உடைக்க கூடுதல் முயற்சி நீங்கள் எடுக்க வேண்டும். எனவே ஆரோக்கியமான பித்தப்பைக்கு சிவப்பு இறைச்சியை தவிருங்கள்.

  • பாலினால் கற்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. எனவே அதற்குப் பதிலாக குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்களை உண்ணுங்கள்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்