தொப்பை வராமல் இருக்க நம் முன்னோர்கள் இதை தான் குடிச்சாங்களாம்! அது என்ன தெரியுமா?

Report Print Kavitha in ஆரோக்கியம்
760Shares

ஒருவரது அதிகரித்த உடல் எடையைக் குறைக்க ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சிகள் உதவும் என்பது நாம் அனைவருமே அறிந்திருப்போம்.

அதிலும் ஒருசில பானங்கள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான கொழுப்புக்களை வேகமாக எரிக்க உதவி புரிந்து, விரைவில் உடல் எடை மற்றும் தொப்பையைக் குறைக்க உதவுகின்றன.

அதுமட்டுமின்றி இந்த காலத்தில்நம் முன்னோர்கள் தொப்பையின்றி நீண்ட நாட்கள் ஃபிட்டாக இருக்க ஒரு சூப்பரான பானம் ஒன்றை தயாரித்து அன்றாடம் குடித்து வந்துள்ளனர்.

தற்போது அது என்ன பானம், இதனை எப்படி தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்
  • வெல்ல பவுடர் - ஒரு டீஸ்பூன்
  • வெதுவெதுப்பான நீர் - ஒரு டம்ளர்
செய்முறை

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி வெதுவெதுப்பாக சூடேற்றி இறக்கிக் கொள்ள வேண்டும். பின் அதில் வெல்லத்தை சேர்த்து நன்கு கலந்து, அதன் பின்னர் எலுமிச்சை சாற்றினை சேர்த்து மீண்டும் கலந்தால், பானம் தயார்.

இந்த பானத்தை ஒருவர் தினமும் காலையில் எழுந்ததும் காபி, டீ-க்கு பதிலாக வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடல் எடையும், தொப்பையும் வேகமாக குறைவதைக் காணலாம்.

நன்மைகள்

எலுமிச்சை உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்ற உதவும். உடல் எடையைக் குறைத்து பராமரிக்க உதவும். மேலும் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் கொழுப்புக்கள் தேங்குவதைத் தடுப்பதுடன், கெட்ட கொழுப்புக்களின் அளவையும் குறைக்கும்.

வெல்லம் உடலின் மெட்டபாலிசம்/வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவி, உடல் எடையை வேகமாக குறைக்க உதவி புரியும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்