வரலாற்றை மாற்றியமைத்த ரத்தினக்கல் சிற்பம்

Report Print Kabilan in வரலாறு

சுமார் 3500 ஆண்டுகள் பழமையான ரத்தினக்கல் சிற்பம் வரலாற்றை மாற்றி அமைக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் சின்சினாட்டி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கிரேக்க நாட்டின் பைலோஸ் நகரில் ஒரு கல்லறையை கண்டுபிடித்துள்ளனர்.

வெண்கல காலத்தைச் சேர்ந்த இந்த கல்லறையில், 2015ஆம் ஆண்டு பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில், நகைகள், பாதுகாப்பு கவசங்கள், ஆயுதங்கள், விலையுயர்ந்த கற்களில் செய்யப்பட்ட சிற்பங்கள் ஆகியவை அடக்கம்.

இதனுடன், 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மிக அழகான சிற்பம் ஒன்றும் கிடைத்துள்ளது. 3.6 சென்டிமீட்டர் அளவுள்ள ரத்தினக்கல் ஒன்றில் இந்தச் சிற்பம் செதுக்கப்பட்டிருக்கிறது. இதனை உருப்பெருக்கியின் மூலமாக பார்த்தால் தான் தெரியும்.

இந்த ரத்தினக்கல், சுண்ணாம்புப் பொருளால் மூடப்பட்டிருந்தது. இதனை மிகவும் கவனமாக சுத்தம் செய்து, ஆராய்ச்சியாளர்கள் சிற்பத்தினைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தச் சிற்பத்தில் இருவர் நேருக்கு நேர் வாள் சண்டையிடுகிறார்கள். இன்னொருவர் சண்டையில், தோற்று கீழே விழுந்து கிடக்கிறார். எந்த தொழில்நுட்பமும் இல்லாத காலகட்டத்தில், மிகச் சிறிய இடத்துக்குள்

இவ்வளவு நுணுக்கமான ஒரு சிற்பத்தினை எப்படி வடிவமைக்க முடிந்தது என அனைவரும் வியக்கின்றனர். இது குறித்து கிரேக்க தொல்லியல் துறை பேராசிரியர் ஜேக் டேவிஸ் கூறுகையில்,

‘கிரேக்க கலைகளைப் பற்றிய வரலாறு, இப்போது இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னோக்கிச் சென்றுவிட்டது. கிரேக்கத்தின் பாரம்பரியம் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டதை இந்தச் சிற்பம் எடுத்துக்காட்டியுள்ளது.

சில நுட்பமான விடயங்கள் அரை மில்லிமீட்டருக்குள் வடிக்கப்பட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது. கல்லறையில் இருந்து 3 ஆயிரம் பொருட்கள் கிடைத்துள்ளன.

இவற்றில் இந்த ‘சண்டை ரத்தினக்கல்’ போன்று 50 கற்கள் கிடைத்திருக்கின்றன. இன்னும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் இருந்தும் உலகத்துக்கு சுவாரசியமான விடங்கள் கிடைக்கலாம்.

மேலும், இனி வரலாற்றுப் புத்தங்களில் சிற்பக் கலையின் வரலாறு மாற்றி எழுதப்படும்’ என தெரிவித்துள்ளார்.

இந்த ரத்தினக்கல் சிற்பம் மூலம், கலைகளைப் பற்றிய வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வரலாறு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...