சுவாதி கொலை வழக்கு: சந்தேகங்களும் கேள்விகளும்!

Report Print Arbin Arbin in இந்தியா
சுவாதி கொலை வழக்கு: சந்தேகங்களும் கேள்விகளும்!

சுவாதி படுகொலை தொடர்பாக தற்போது விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவல்கள் முழுமையானதா என்பதில் பல கேள்விகளும் சந்தேகங்களும் சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.

சென்னை மென்பொறியாளர் சுவாதி படுகொலை வழக்கில் பொலிஸ் தரப்பில் வெளியிட்டுள்ள தகவல்கள் பலருக்கும் கேள்விகள் மற்றும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

ஆனால் இந்த சந்தேகங்கள், கேள்விகள், குழப்பங்கள் அனைத்திற்குமே விடை தெரிய வேண்டும் என்றால் ராம்குமார் முழுமையாக பேச வேண்டும் என ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்,

இந்த வழக்கு தொடர்பாக ராம் குமார் முழுமையாக, சுதந்திரமாக வாக்குமூலம் அளிக்க அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் பலதரப்பு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அப்போது மட்டுமே கொலைக்கான பின்னணி குறித்த உண்மையான காரணங்கள் வெளிப்படும் என்று பலரும் கருதுகின்றனர்.

விசாரணை அதிகாரிகளின் தற்போதைய கூற்றுப்படி ராம்குமார் ஏன் கொலை செய்தார் என்று அவர்கள் கூறியுள்ள காரணங்கள் முழுமையானதாக இல்லை என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

ராம்குமார் சென்னையில் தங்கியிருந்தது 3 மாதங்கள்தான் என்று கூறப்படுகிறது. ஆனால் நான்கு மாத காலமாக சுவாதியுடன் அவருக்குப் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.

இருவருக்கும் இடையிலான தொடர்பு திடீரென தோன்றியிருக்க வாய்ப்பில்லை என்றும் கருதப்படுகிறது.

மேலும் ஒரு நபர் கொலை செய்ய முடிவெடுப்பதற்கு, அதுவும் திட்டமிட்டு செய்வதற்கு வலுவான காரணம் இருக்க வேண்டும் என்றே கருதப்படுகிறது. அந்த வகையில் சுவாதி தரப்பிலிருந்து ராம்குமாரை இந்த அளவுக்கு கொலை வெறியைத் தூண்டும் அளவுக்கு என்ன நடந்தது என்பது கண்டறியப்பட வேண்டியுள்ளது.

ராம்குமாருடன் இன்னொருவருக்குத் தொடர்பு இருப்பதாக ஆரம்பத்தில் பொலிஸ் தரப்பில் தகவல்கள் வெளியாகின. இதை உறுதிப்படுத்துவது போல சுவாதி படுகொலையை நேரில் பார்த்த ஒருவர் அளித்த வாக்குமூலம் இருந்தது.

சென்னை வண்டலூரைச் சேர்ந்த அவர் தனியார் காட்சி ஊடகத்தில் கூறுகையில், சம்பவம் நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு சுவாதியுடன் நல்ல உயரமான ஒருவார் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும்,

கன்னத்தில் அவர் அறைந்ததாகவும், அதற்கு சுவாதி எதிர்ப்பு தெரிவிக்காமல் அடுத்த ரயில் ஏறி புறப்பட்டார் என்றும் கூறியிருந்தார்.

எனவே அந்த நபரும், ராம்குமாரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்களா, அந்த நபர் யார் என்ற கேள்விகள் எழுகின்றன.

அடித்த நபர் குறித்து பொலிஸ் தரப்பில் எதுவுமே வெளியிட தற்போது மறுக்கிறார்கள்.

அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சுவாதி குடும்பத்தினரும் கூட கூறுகிறார்கள். இருப்பினும் நடந்தது உண்மைதான் என வண்டலூர் நபர் உறுதிபட தெரிவிக்கிறார்.

இதுவும் குழப்பமாக உள்ளது. மொத்தத்தில் ராம்குமார் உடல் நலம் சரியாகி வந்து முழுமையாக வாக்குமூலம் அளிக்கும்போதுதான் உண்மைகளும் முழுமையாக வெளிவரும் என்பது மட்டும் உறுதி.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments