தடைகளை தகர்த்தெறிந்த சரித்திர தலைவி: இந்த 5 வெற்றிகளே அதற்கு உதாரணம்!

Report Print Jubilee Jubilee in இந்தியா

தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்க்கையை தொடங்கியது ஒரு நடிகையாக என்றாலும், பல உச்சங்களை தொட்டது அரசியல் பயணத்தில் தான்.

உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனில்லாமல் மரணமடைந்தார். இவரது இழப்பு தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

அதுமட்டுமல்லாது இவரது மறைவு இந்திய அரசியல் வரலாற்றிலும் மிகப்பெரிய வெற்றிடத்தை உருவாக்கி உள்ளது.

அரசியல் பயணத்தில் இவர் பலவற்றை சாதித்திருந்தாலும், இந்த 5 வெற்றிகள் மூலம் இவர் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையும் அறியலாம்.

  • ஜெயலலிதாவின் மிகப்பெரிய அரசியல் வெற்றி என்றால் அது 1989ம் ஆண்டு தான். ஜெயலலிதாவின் அரசியல் வழிகாட்டியான எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் கட்சியானது இரு பிரிவுகளாக உடைந்தது. அப்போது 27 இடங்களை பெற்று வெற்றி பெற்ற ஜெயலலிதா முதல் பெண் தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவரானார்.
  • இரண்டாவது மிகப்பெரிய வெற்றியானது 1991ம் ஆண்டு ராஜீவ்காந்தியின் படுகொலைக்கு பிறகு காங்கிரஸூடனான கூட்டணியில் ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டார். தமிழ்நாட்டின் 2வது பெண் முதல்வர், குறைந்த வயது முதல்வர் என்ற பல வரலாறு படைத்தார்.
  • 2001ல் ஜெயலலிதா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இரு முக்கிய வழக்குகளிலும் சிக்க வைக்கப்பட்டார். ஆனால் மக்கள் அவர் மீது கொண்ட நம்பிக்கையால் 234 தொகுதிகளில் 196 இடங்களில் அபார வெற்றி பெற்றார்.
  • 2011ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதாவின் மீதான வழக்குகளால் தனக்கு தான் வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கையில் இருந்தது திமுக. ஆனால் அந்த நம்பிக்கையை தவிடுபொடியாக்கி ஆட்சியை பிடித்தார் ஜெயலலிதா.
  • இதன் பின்னர் 2016ம் ஆண்டும் இதே நிலைமைதான் ஏற்பட்டது. மக்களின் அனுதாபங்களை பெற்ற ஜெயலலிதா தொடர்ச்சியாக 2வது முறையாக முதல்வராகி சாதனை படைத்தார். இவரின் இந்த வெற்றி எதிர்கட்சியான திமுகவை அதிர்ச்சிக்குள்ளாகியது.
இந்நிலையில் 4 முறை முதல்வராக இருந்த சிறந்த பெண் தலைவர் என்ற சாதனையோடு விடைபெற்றுவிட்டார் ஜெயலலிதா.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments