கடத்தல் வழக்கில் ஆறு மணி நேர விசாரணை: கதறி அழுத காவ்யா மாதவன்

Report Print Raju Raju in இந்தியா

மலையாள நடிகை கடத்தல் வழக்கில் திலீப்பின் மனைவி காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்தப்பட்ட போது அவர் கதறி அழுததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரபல மலையாள திரைப்பட நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் கடந்த 10ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

இதில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில், நடிகையின் வீடியோ அடங்கிய மெமரி கார்டை திலீப்பின் மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவனின் கடையில் கொடுத்ததாக தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காவ்யா மாதவனிடம் பொலிசார் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையின் போது காவ்யா மாதவன் கதறி அழுததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விசாரணையில் காவ்யா மாதவன் எந்தவொரு முக்கிய தகவலையும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதன் பிறகு அவரின் அம்மா சியாமளாவிடமும் பொலிசார் விசாரணை நடத்தினார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers