மாப்பிள்ளைக்கு அல்வா கொடுத்து காதலனுடன் மணப்பெண் ஓட்டம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த காதலன் மணப்பெண்ணுடன் ஓட்டம் பிடித்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

வேலூர் மாவட்டம் திருவலம் பகுதியைச் சேர்ந்தவர் யுரேஷியா. தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் இவருக்கு, அவரது குடும்பத்தினர் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

அதன்படி மாப்பிள்ளை பார்க்கப்பட்டு, அங்குள்ள திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து மறுநாள் காலை 3 மணியளவில் நலங்கு வைப்பதற்காக மணமகனுக்கு சடங்குகள் நடத்தியுள்ளனர். அதைத் தொடர்ந்து மணமகளுக்கு சடங்குகள் வைப்பதற்காக, மணமகள் அறைக்குச் சென்று பார்த்த போது, அங்கு மணமகள் இல்லாததைக் கண்டு பெற்றோர் அதிர்ந்தனர்.

இதனால் மணமகளை மண்டபம் முழுவதும் தேடிய போதும் அவர கிடைக்காததால், வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த இளைஞர் ஒருவரின் மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதன் பின் விசாரித்த போது, அந்த இளைஞரின் பெயர் வெங்கடேசன் என்றும் அவர் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.

வெங்கடேசனும் யுரேஷியாவும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். திடீரென்று பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்ததால், யுரேஷியா திருமண வரவேற்பு நிகழ்ச்சி அன்று வெங்கடேசனுடன் சென்று லத்தேரியில் உள்ள பெருமாள் கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டு, காவல்நிலையத்தில் தஞ்சம அடைந்துள்ளார்.

இருவரும் மேஜர் என்பதால், பொலிசார் வேறுவழியின்றி காதலனுடன் மணப்பெண்ணை அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்