பெண்ணை அடித்து கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகத்தில் தன்னந்தனியாக வசித்து வந்த பெண்ணை கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பவானி அருகே ஜம்பை சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார்.

இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர், இவர்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

சத்தியமூர்த்தி இறந்த நிலையில் தனியாக வசிக்கும் தனிலட்சுமி ராமு என்பவரின் 4½ ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்றிரவு தனலட்சுமி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

மர்ம நபர்கள் அவரை கொன்றுவிட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து விரைந்து சென்ற பவானி பொலிஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் அதிகாரிகள் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனலட்சுமி வீட்டிலிருந்து பணமோ, நகையோ திருடுபோகாததால் திருடர்களின் வேலை இல்லை என்பது தெரியவந்துள்ளது.

எனவே யாரோ முன்பகை காரணமாக தனலட்சுமியை கொலை செய்திருக்ககூடும் என பொலிசார் கருதுகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers