மனைவியின் தலையை துண்டாக வெட்டி மறைத்து வைத்திருந்த கணவன்: காட்டிக் கொடுத்த மகள்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் மனைவியை கொலை செய்து அவரை படுக்கைக்கு அடியில் கணவன் மறைத்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் பகுதியைச் சேர்ந்தவர் பினோத் பதாக். இவருக்கு அனு என்ற மனைவி உள்ள நிலையில், வேறொரு பெண்ணுடன் பினோத்துக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதை அறிந்த அனு அவரிடம் இது குறித்து தொடர்ந்து சண்டை போட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் இந்த சண்டை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மீண்டு துவங்கியுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த பினோத் மனைவியான அனுவை கொலை செய்து, தலையைத் துண்டித்துள்ளார்.

அதன் பின் அவரது தலையையும் உடலையும் சாக்கு பையில் போட்டு படுக்கைக்கு கீழே உள்ள பெட்டியில் மறைத்து வைத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து ஒன்றும் தெரியாதது போல், தன் மனைவி மாயமாகி விட்டதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் பேரில், அவரது வீட்டிற்கு பொலிசார் விசாரணைக்கு சென்ற போது அவரது 14 வயது மகள் தன் தந்தை தாயைக் கொலை செய்து மறைத்து வைத்துள்ளதை கூறியுள்ளார்.

இதனையடுத்து, கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற பினோத்தை பொலிசார் தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers