சென்னை வங்கியில் புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளை: இளைஞர் கைது

Report Print Raju Raju in இந்தியா

சென்னை அடையாறு இந்தியன் வங்கி கிளையில் வாடிக்கையாளர் ஒருவரிடம் துப்பாக்கி முனையில் 6 லட்சம் ரூபாயை கொள்ளையடித்தவர் கைது செய்யபட்டார்.

வங்கி கிளைக்குள் புகுந்த மர்ம நபர் துப்பாக்கி முனையில் அங்கிருந்தவர்களை மிரட்டி ஆறு லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றார்.

அடையார் சிக்னலில் அவரை மடக்கி பிடித்த போக்குவரத்து பொலிசார் அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அவரிடமிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகளும், ஆறு லட்ச ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டது. விசாரணையில் அவர் பீகாரைச் சேர்ந்த சுனில் குமார் யாதவ் என்பதும், கேளம்பாக்கத்தில் தங்கியிருப்பதும் தெரிய வந்தது.

கொள்ளை சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என வங்கியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்