செல்பி எடுக்க முற்பட்டவரின் உயிரை பறிக்க பார்த்த கரடி : கொடூரமாக அடித்து கொலை செய்த கிராம மக்கள்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் கரடியுடன் செல்பி எடுக்க முற்பட்ட போது, அது தாக்க முற்பட்டதால், அவர் சிறிய அளவிலான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

ஒரிசாவில் 27 வயது மதிக்கத்தக்க நபர், கரடியின் அருகே செல்பி எடுக்க முற்பட்ட போது கரடி அவரை தாக்கியுள்ளது. இதனால் கரடிக்கு பயந்து ஓடி வந்த போதும், கரடி அவரை விரட்டி தாக்கியுள்ளது.

இதைக் கண்ட அங்கிருந்த மக்கள் உடனடியாக குச்சி, வேல்கம்பு மற்றும் கற்களை பயன்படுத்தி கரடியிடம் சிக்கியிருந்த நபரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் கரடி தொடர்ந்து அவரை தாக்கிக் கொண்டிருந்ததால், அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர், கரடியை கடுமையாக தாக்கி நிலைதடுமாற வைத்தார். அதன் பின் அங்கிருந்த அனைவரும் கரடியை குச்சி மற்றும் வேல்கம்பால் அடிக்க அந்த இடத்திலே அது பரிதாபமாக இறந்துள்ளது.

இது தொடர்பான வீடியோ காட்சியை அங்கிருக்கும் நபர் ஒருவர் எடுத்துள்ளார். கரடியால் தாக்கப்பட்ட நபருக்கு உயிருக்கு ஆபத்து ஒன்றுமில்லை எனவும், சிறிய அளவிலான காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒருவாரத்திற்கு முன்பு தான் ஒரிசாவில் இதே போன்று பிரபு பாத்ரா என்பவர் கரடியுடன் செல்பி எடுக்க முற்பட்ட போது பரிதாபமாக பலியாகினார். இந்த ஒரு வருடத்தில் மட்டும் கரடியால் நான்கு பேர் தாக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...