போர்க்களமான காவேரி மருத்துவமனை: பரபர நிமிடங்கள்

Report Print Arbin Arbin in இந்தியா

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை திடீரென்று நலிவடைந்ததை அடுத்து சென்னையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனை நிர்வாகம் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில் கருணாநிதியின் உடல்நலத்தில் தொய்வு ஏற்பட்டு தற்போது நிலைமை சீராகி விட்டதாக அறிக்கை வெளியாகியது.

இதனிடையே திமுக தலைவர் கருணாநிதி தற்போது நலமுடன் இருக்கிறார், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பேட்டியளித்துள்ளார்.

எனினும் கொட்டும் மழையிலும் தொண்டர்கள் மருத்துவமனை வாசலில் காத்துக் கிடக்கின்றனர்.

மட்டுமின்றி கட்சி தலைவர்கள் வந்து செல்லும் பொருட்டு வழிவிடும்படி தொண்டர்களுக்கு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் மருத்துவமனையிலிருந்து ஸ்டாலின் உள்ளிட்ட கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் புறப்பட்டு சென்றுள்ளனர்.

இதனிடையே திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனை எதிரே தொண்டர்கள் மற்றும் பொலிசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்கும் நிலைக்கு காவல்துறை தள்ளப்பட்டது. இதனால் கவேரி மருத்துவமனை வளாகம் போர்க்களமானது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...