நள்ளிரவில் என்னுடைய வீட்டின் கதவை பொலிசார் தட்டினர்! உண்மையில் நடந்ததை விளக்கிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்

Report Print Santhan in இந்தியா

பிரபல இயக்குனரான ஏ.ஆர்.முருகதாசின் வீட்டிற்கு நள்ளிரவில் பொலிசார் சென்றதால், அவர் கைது செய்யப்பட்டதாக செய்தி பரவியதால், அது குறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

திரைப்பட நடிகர் விஜய் நடிப்பில் உருவான சர்க்கார் திரைப்படம் தீபாவளியன்று வெளியானது.

இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிருந்தார். இதில் வரும் சில காட்சிகள் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும், அரசின் இலவச பொருட்களை தீயில் போட்டு கொளுத்துவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.

இதைத் தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், வன்முறையை தூண்டும் வகையில் சர்கார் படத்தில் காட்சிகள் வைத்த இயக்குனர், நடிகர் மற்றும் படத்தை திரையிட்ட திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.

நேற்று தலைமைச் செயலகத்தில் அரசின் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணனனை அழைத்து சர்கார் திரைப்படம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.

சர்கார் படம் ஓடும் திரையரங்குகள் முன்பு அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டிற்கு பொலிசார் விரைந்ததால், அவர் கைது செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளியானது.

அதன் பின் பொலிசார் முருகதாசை கைது செய்யவில்லை என்றும், வழக்கமான ரோந்துக்கே சீப்ரோஸ் குடியிருப்புக்கு வந்ததாகவும் கூறிச் சென்றனர்.

இது குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தனது வீட்டிற்கு பொலிசார் வந்ததாகவும் அத்துடன் தனது வீட்டின் கதவை பல முறை தட்டியதாகவும், தான் அங்கு இல்லை என்று தெரிந்த பிறகு பொலிசார் திரும்பிச் சென்றதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers