தன்னுடைய இதய அறுவைசிகிச்சைக்காக சேர்த்த பணம்! மக்களுக்காக வழங்கிய சிறுமி- நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Fathima Fathima in இந்தியா

தன்னுடைய இதய அறுவை சிகிச்சைக்காக சேர்த்த பணத்தை கஜா புயல் நிவாரணத்துக்கு வழங்கிய மாணவியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் பாலு(வயது 38), இவரது மனைவி கவிதா, இவர்களது மகள் இசனா பாலு(7).

பாலு மற்றும் கவிதா இருவரும் பொலிஸ் அதிகாரியாக சென்னையில் பணியாற்றி வருவதால், இசனா பாலு அவரது பாட்டியின் கண்காணிப்பில் வளர்ந்து வருகிறார்.

சிறுமிக்கு மூன்று வயதாக இருக்கும்போது இதயத்தில் பாதிப்பு இருந்ததால் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது, அதன்பின்னர் 10 வயதில் மற்றொரு சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.

இதற்காக உண்டியலில் பணம் சேர்க்க தொடங்கினார், இந்நிலையில் கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்த நிதியை வழங்க முடிவு செய்தார்.

இந்நிலையில் சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் வந்தனர்.

விழாவுக்கு தனது பாட்டி பூங்கோதையுடன் வந்த இசனா பாலு தான் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் வழங்கினார்.

அந்த உண்டியலில் ரூ.950 இருந்தது, இதய அறுவைசிகிச்சைக்கான பணம் என்பதை தெரிந்து கொண்ட அமைச்சர் இரண்டாவது அறுவைசிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும் என தெரிவித்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்