இறந்துபோன இராணுவ வீரர்களுக்கு பதிலாக விடுதலைப்புலிகளின் புகைப்படம்: சமூகவலைதளத்தில் குழப்பம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் திகதி அன்று, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த அடில் அகமது என்னும் நபர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர்.

தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த 40 ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் விடுதலைப்புலிகளின் புகைப்படத்தை இராணுவ வீரர்களை என நினைத்து அச்சிட்டு அஞ்சலி செலுத்திய தவறான நிகழ்வு நடந்துள்ளது,

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சுமைதூக்கும் தொழிலாளர்கள் ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக மவுன ஊர்வலம் நடத்தினர். இறுதியில் இந்திய ராணுவ வீரர்கள் என்று பேனர் கடைக்காரர் அச்சிட்டு கொடுத்திருந்த 40 விடுதலை புலிகளின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

பலியான ராணுவ வீரர்கள் என்று சமூக வலைதளங்களில் தவறாக பரப்பப்படும் விடுதலைபுலிகளின் படத்தை கடைக்காரர் தவறாக அச்சிட்டு கொடுத்து விட்டதாக பின்னர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது போன்ற தவறு வேலூர் மாவட்டத்திலும் நடந்துள்ளது. சமூகவலைதளங்களில் பரப்பப்படும் சில தவறான தகவல்கள் இப்படி ஒரு நிகழ்வு நடந்துள்ளது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்