நடிகர் ரித்தீஷின் மரணம்.... ஒரு குழந்தைக்கு அப்பா முகமே தெரியாமப்போச்சு: மனைவி குறித்து கண்கலங்கிய ஜெயந்தி

Report Print Deepthi Deepthi in இந்தியா

இறந்துபோன நடிகர் ரித்தீஷ்ஷின் மனைவி லோகேஸ்வரி குறித்து தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசனின் மருமகள் ஜெயந்தி கண்ணப்பன் கண்கலங்கியுள்ளார்.

ஜெயந்தி கண்ணப்பன் கூறியதாவது, ரித்தீஷை காதலிச்சு திருமணம் செய்துகொண்டாள். எந்த பொண்ணுக்கும் வரக்கூடாத துன்பம் இது.

கணவரை இழந்து மூன்றுகுழந்தைகளுடன் இருக்கும் அவளே சின்னப் பொண்ணுதான். அதில் ஒரு குழந்தைக்கு அப்பாவுடைய முகமே தெரியாமப்போச்சு, இனி அவள் என்ன செய்யப்போகிறான் என தெரியலை என்று கண்கலங்கியுள்ளார்.

கலைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரை பார்ப்பதற்காக சென்றிருந்தேன். அப்போது குழந்தைக்கு தடுப்பூசி போட வந்த அவளையும் சந்தித்தேன். நான் குழந்தைக்கு பணம் கொடுத்த போது, பணம் வேண்டாம் ஆசிர்வாம் போதும் என்று சொன்னாள்.

அவளின் கணவர் ரித்தீஷ் இறந்த செய்தி கேட்டு மிகவும் வேதனையடைந்தேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers