எந்த காலத்திலும் அதை நான் செய்ய மாட்டேன்: சீமான் அதிரடி அறிவிப்பு

Report Print Arbin Arbin in இந்தியா

இனி தமிழகத்தில் நடந்தேறும் அனைத்து தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

சென்னை செங்குன்றத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் திருவள்ளூர் நாடாளுமன்ற வேட்பாளர் வெற்றிச்செல்வியை ஆதரித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.

அந்த கூட்டத்தில் பேசிய அவர், உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்தால் அவர்களின் குடும்பம் தான் வெளிச்சத்திற்கு வரும் என்றும், இரட்டை இலை மொட்டை இலையாகி விட்டது என்றும் சாடினார்.

அண்டா, மிக்சி, கிரைண்டர் இலவசமாக கொடுக்கும் நாட்டில் கல்வியும், மருத்துவமும் இலவசமாக இல்லை என வேதனைத் தெரிவித்தார்.

தரமான கல்வியை இலவசமாக நாம் தமிழர் கட்சியால்தான் தர முடியும் எனவும், கல்வியை வியாபாரமாக்கி, மருத்துவத்தை வியாபாரமாக்கியுள்ள கட்சிகளால் இலவசமாக தர முடியாது எனவும் குறிப்பிட்டார்.

மட்டுமின்றி, எந்தக் காலத்திலும் திமுக, அதிமுக மற்றும் தேசிய கட்சிகளோடு கூட்டு இல்லை, 234 தொகுதிகளிலும் மீண்டும் தனித்தே நிற்பேன் எனவும் சீமான் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers