பல பெண்களை மிரட்டி துஷ்பிரயோகம்.. வீடியோ வெளியானதால் கைது.. ஆட்டோ ஓட்டுநர் வழக்கில் திடுக்கிடும் தகவல்கள்!

Report Print Kabilan in இந்தியா

சேலத்தில் கல்லூரி மாணவி உட்பட 7 பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்த வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்ட வழக்கில், அவர் மீது குண்டர் சட்டம் பாயும் என தெரியவந்துள்ளது.

சேலம் மாவட்டம் வேம்படிதாளத்தை அடுத்த செல்லியம்பாளையத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ்(42). ஆட்டோ ஓட்டுநரான இவர், வாலிபர் ஒருவரை தவறான உறவுக்கு அழைத்ததாக நேற்று முன் தினம் மகுடஞ்சாவடி பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

அப்போது அவரது செல்போனை ஆய்வு செய்த போது, பல பெண்களை மோகன்ராஜ் பலாத்காரம் செய்ததும், அதனை வீடியோவாக எடுத்து மிரட்டி அவர்களுடன் உல்லாசமாக இருந்து வந்ததும் தெரியவந்தது. இதற்கிடையில் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர், ஏற்கனவே பொலிசாரிடம் மோகன்ராஜ் மீது பாலியல் புகார் அளித்திருந்தார்.

குறித்த பெண்ணை மோகன்ராஜ் வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, அப்பெண்ணிடம் பொலிசார் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. மோகன்ராஜ் தனது ஆட்டோவில் வரும் பெண்களிடம் பேச்சு கொடுத்து, அவர்களின் குடும்ப பிரச்னைகளை கேட்டு அதற்கு உதவ பணம் தருவதாக கூறி வந்துள்ளார்.

அதற்காக தனது வீட்டிற்கு அழைத்து சென்று மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இவ்வாறாக கல்லூரி மாணவி உட்பட 7 பெண்களை மிரட்டி அவர் பலாத்காரம் செய்து, அவற்றை வீடியோவாக எடுத்து வைத்துள்ளார். இந்நிலையில், பொலிசார் மோகன்ராஜின் பின்புலத்தை அறிய அவரது வீடு மற்றும் ஆட்டோ நிறுத்தியிருந்த பகுதியில் விசாரணை நடத்தினர்.

அப்போது, அரசியல் பின்புலத்துடன் அவர் பல பெண்களை பலவந்தமாக துஷ்பிரயோகம் செய்ததாக தெரிய வந்தது. மேலும் தனது நண்பர் ஒருவருடன் இணைந்து, பள்ளிக்கு செல்லும் மாணவிகளை வழியில் தடுத்து நிறுத்தி, ஏற்காடுக்கு தனது ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பல இடங்களை சுற்றி காண்பித்து விட்டு, மாலையில் பள்ளி விடும் நேரத்தில் மாணவிகளை பள்ளிக்கூடம் அருகே விட்டுவந்துள்ளார்.

இதனை அறிந்த மாணவிகளின் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்நிலையில் மோகன்ராஜ் பெண்களை பலாத்காரம் செய்த இடம் கொண்டலாம்பட்டி பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால், அந்த வழக்குகளை அந்த காவல் நிலையத்திற்கு மாற்ற உள்ளனர். இதற்கிடையில் மோகன்ராஜ் மீது புகார் அளித்த பெண், தனது மகள் மற்றும் மகனுடன் மாயமாகிவிட்டதாக தெரிய வந்துள்ளது.

அத்துடன் பலாத்கார சம்பவத்தில் மோகன்ராஜுக்கு உதவிய அவரது நண்பரும் மாயமாகியுள்ளதால், இந்த வழக்கில் அவர்களைப் பிடித்து விசாரித்தால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறையில் அடைக்கப்பட்ட மோகன்ராஜை காவலில் எடுத்து விசாரிக்கவும், அவர் குண்டர் சட்டம் பாயவும் பொலிசார் நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தெரிய வந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்