கொலை வழக்கில் சிறைக்கு சென்ற கணவன் மனைவி.... அனாதையாக தவிக்கும் மூன்று வயது குழந்தை!

Report Print Abisha in இந்தியா

சென்னையில் கடந்த ஆண்டு நடந்த கொலை சம்பவத்தில் கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 3வயது மகன் அனாதையாக விடப்பட்டுள்ளான்.

சென்னை ஆவடியை அடுத்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஜெகதீசன் அவரின் மனைவி விலாசினி. இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொலை செய்யப்பட்டனர்.

இது குறித்து விசாரித்ததில், அவர்கள் வீட்டில் பணிக்காக தங்கியிருந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரது மனைவி பூவலட்சுமி ஆகியோர் தலைமறைவானது தெரியவந்தது. அவர்களுக்கும் இந்த கொலைக்கும் தொடர்பிருக்கலாம் என்று கண்டறிந்த பொலிசாருக்கு, குற்றவாளிகளை பிடிக்க முடியவில்லை.

எனவே தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், இருவரும் கங்கை நதிகரை ஓரத்தில் உள்ள வீட்டில் தங்கி உள்ளனர் என்று பொலிசாருக்கு தகவல் கிடைத்து அங்கு சென்று கைது செய்துள்ளனர்.

ஜெகதீசன் - விலாசினி

இது குறித்து வாக்குமூலம் அளித்த சுரேஷ், நான் ஏற்கனவே கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளேன். மேலும், ஒரு கொள்ளையில் ஈடுபட்டதால் கைது செய்யபடுவேன் என்று சென்னைக்கு வந்தேன். அங்கு மதுபான விடுத்தியில் ஜெகதீசனை சந்தித்தேன். அவரிடம் எனக்கு வேலை வழங்க வேண்டினேன். அவரது பண்ணை வீட்டில் வேலை கொடுத்தார். அங்கேயே மனைவியுடன் தங்க வைத்தார்.

தொடர்ந்து, அவர் என்னுடன் சேர்ந்து அதிகம் மது அருந்துவதாக, விலாசினி என்னை திட்டினார். ஆத்திரம் அடைந்து கட்டயால் அவரை தாக்கினேன். சத்தம் கேட்டு அங்கு வந்த ஜெகதீசனையும் கொலை செய்துவிட்டு என்னுடை மனைவியுடன் சேர்ந்து நகைகள் மற்றும் பணத்தை எடுத்து கொண்டு குழந்தையுடன் அங்கிருந்து தப்பி சென்றோம் என்று தெரிவித்துள்ளான்.

இந்நிலையில், 3வயது சிறுவன் தாய் தந்தை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அனாதையாக தவித்து வருகிறான் என்று தெரியவந்துள்ளது.

சுரேஷ் - பூவலட்சுமி

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்