புத்தாண்டு கொண்டாட்டங்களை விடுத்து போராட்டத்தில் இறங்கிய பெண்கள் - தேசிய கீதம் பாடி வரவேற்ற நெகிழ்சி வீடியோ!

Report Print Abisha in இந்தியா

குடியுரிமை திருத்த சட்டத்திற்க எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் கடும் குளிரில் புத்தாண்டு கொண்டாட்டத்தை புறகணித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 18வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகின்றது.

இன்று புத்தாண்டு உதயமான நிலையில், நள்ளிரவு முதல் நாடு முழுவதும் பெரும் கொண்டாட்டங்கள் முன்னெடுத்து வருகின்றர்.

ஆனால், டெல்லியில் பெண்கள் இரவு பகலாக போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட சய்மா என்ற பெண் கூறுகையில், “என் குழந்தைகளுக்கு எதிர்காலம் இல்லை என்பதை என்னால் காணமுடிகிறது. ஒரு தாயாக, அவர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்ற, நான் இங்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றேன். எங்கள் உரிமைகள் எங்களுக்கு வழங்கப்பட வேண்டும். இது எனது சண்டை மட்டுமல்ல”. என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் 1வயது குழந்தையுடன் போராட்டத்தில் குதித்துள்ள சஜீதா கான் என்ற பெண் பேசுகையில், “நான் ஜாமியா பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவி. ஜாமியாவில் மதத்தை கொண்டு எந்த பாகுப்பாடும் இல்லை. முதன்முறையாக இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

டெல்லியில் குழுமியிருந்த போராட்டகார்கள் அனைவரும் புத்தாண்டு உதித்ததும், எழுந்து நின்று தேசிய கொடியை உயர்த்திபிடித்து தேசிய கீதம் பாடினர்.

இது தொடர்பான வீடியோ புத்தாண்டில் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்