கடித்த பாம்பை பையில் போட்டு மருத்துவமனைக்கு எடுத்து சென்ற தொழிலாளி: பதறிய மருத்துவர்கள்

Report Print Vijay Amburore in இந்தியா

தன்னை கடித்த பாம்பை தொழிலாளி ஒருவர் மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த சேது என்கிற தொழிலாளி தன்னுடைய வீட்டின் முன், கட்டுவிரியன் பாம்பு ஒன்று எலியை விழுங்கிய நிலையில் மயங்கி கிடப்பதை பார்த்துள்ளார்.

அதனை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சிக்கும் போது, மயங்கி கிடந்த பாம்பு சட்டென சேதுவின் கைகளை சுற்றி கடித்துள்ளது.

வலி தாங்க முடியாமல் அவர் அலறுவதை கேட்ட அக்கம்பக்கத்தினர், விரைந்து வந்து பாம்பை தாக்க ஆரம்பித்துள்ளனர்.

இதில் பாம்பு உயிரிழந்ததை அடுத்து, சேது வேகமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் என்ன பாம்பு கடித்தது எனக் கேட்டுள்ளனர்.

Credits: Vikatan

உடனே அவர் தான் வைத்திருந்த பையில் இருந்து, 3 அடி நீள பாம்பை எடுத்து காட்டியுள்ளார். இதனை பார்த்ததும் அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அந்த பாம்பு ஏற்கனவே இறந்துவிட்டது என்பதை அறிந்துகொண்ட பின்னரே அனைவரும் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்