எனக்கு கொரோனா... மனைவியிடம் கூறிவிட்டு மாயமான இளைஞர்: விசாரணையில் அம்பலமான சம்பவம்

Report Print Arbin Arbin in இந்தியா
1655Shares

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக மனைவியிடம் கூறிவிட்டு காணாமல்போன இளைஞரை காதலியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மும்பை நகரின் வாஷி பகுதியை சேந்த அந்த நபர் ஜூலை 24 அன்று தனது மனைவியை தொலைபேசியில் அழைத்து, தாம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இனி வாழ முடியாது எனவும் கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.

இதனால் குழப்பமான மனைவி தனது சகோதரரை உதவிக்காக அழைத்து, இருவரும் பொலிசாரை அணுகி காணாமல் போனவர் தொடர்பில் புகார் செய்தனர்.

விசாரணையை முன்னெடுத்த பொலிசாருக்கு மாயமான நபர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கமெராக்களை ஆய்வுக்கு உட்படுத்திய பொலிசார், அவரது மொபைல் இருப்பிடத்தையும் கண்டுபிடிக்க முயன்றனர்.

இந்த நிலையில் அவருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு உள்ள விவகாரம் குறித்து பொலிசாருக்கு தெரிய வந்தது.

ஒரு மாத கால தேடலுக்குப் பிறகு, அவர் இந்தூரில் இருப்பது பொலிசாருக்குத் தெரியவந்துள்ளது.

பின்னர் இந்தூருக்கு விரைந்த பொலிசார் அந்த இளைஞரை தனது காதலியுடன் கண்டுபிடிக்கப்பட்டார்.

தொடர்ந்து அவர் செப்டம்பர் 15 ஆம் திகதி மீண்டும் மும்பைக்கு அழைத்து வரப்பட்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்