ஜெயலலிதா சமாதியில் சசிகலா எடுத்த மூன்று சபதங்கள்! விடுதலைக்கு பின் அதை நிறைவேற்றுவாரா?

Report Print Santhan in இந்தியா
2909Shares

சசிகலா விரைவில் விடுதலையாகவுள்ள நிலையில், சமாதியில் அவர் செய்த சபதம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

சொத்துகுவிப்பு வழக்கு காரணமாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும், சசிகலா அபராதத் தொகையான 10 கோடி ரூபாயை கட்டிவிட்டதால், அவர் விடுதலை என்பது உறுதியாகிவிட்டது.

வரும் ஜனவரி மாதம் 20-ஆம் திகதிக்கு பின்னர் விடுதலை செய்யப்படுவார் என்று பெங்களூரு சிறை கண்காணிப்பாளர் சேஷமூர்த்தி கூறியிருந்தார்.

இதற்கிடையில் அவர் விரைவில் விடுதலையாவதற்கு தேவையான அனைத்து வேலைகளும் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன்னதாக ஜெயலலிதா சமாதியில் மூன்று முறை அடித்து உதடு முணுமுணுக்க கோபமாக சபதமிட்டார்.

அப்போது என்ன சொல்லி சபதமிட்டார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அவர் விடுதலையை முன்னிட்டு பல்வேறு அரசியல் காய் நகர்த்தல்கள் நடைபெற்று வரும் நிலையில் நெருக்கடிக்கிடையே தான் வெளியே வரவுள்ளார்.

அவர் வெளியே வந்த பின்பு அவரது நடவடிக்கைகளைப் பார்த்தே அவர் இட்ட சபதம் என்ன என்பதையும் அதை நிறைவேற்றுவாரா என்பதையும் அறிய முடியும்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்