ஏர் இந்தியா விமான துணை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

Report Print Deepthi Deepthi in வேலைவாய்ப்பு
14Shares
14Shares
ibctamil.com

இந்திய பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியாவின் துணை நிறுவனங்களில் ஒன்று ஏர் இந்தியா என்ஜினீயரிங் சர்விசஸ் லிமிடெட் (ஏ.ஐ.இ.எஸ்.எல்.).

தற்போது இந்த நிறுவனத்தில் டிரைவர் மற்றும் யூடிலிட்டி ஹேண்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

விண்ணப்பதாரர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், கனரக மற்றும் இலகு ரக வாகன லைசென்சு பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

10 மற்றும் 12-ம் வகுப்பு படித்து விமானத்துறை சம்பந்தமான பணியில் 5 ஆண்டு அனுபவம் பெற்றவர்கள் யூடிலிட்டி ஹேண்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

திறமைத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள், 30-10-2017-ந் திகதி இதற்கான நேர்காணல் கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்