ஐரோப்பிய நாடுகளில் அறிமுகமாகியது Motorola One Hyper

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

Motorola நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்து வைத்துள்ளது.

Motorola One Hyper எனும் பெயருடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இக் கைப்பேசியின் விலை 270 பவுண்ட்களாக காணப்படுகின்றது.

அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக் கைப்பேசியில் Snapdragon 675, பிரதான நினைவகமாக 4GB RAM என்பனவற்றுடன் 128GB சேமிப்பு நினைவகமும் தரப்பட்டுள்ளது.

மேலும் இதன் தொடுதிரையானது 6.5 அங்குல அளவுடையதாகவும், 2340x1080 Pixel Resolution உடையதாகவும் இருக்கின்றது.

தவிர 32 மெகாபிக்சல்களை உடைய பொப்பப் செல்ஃபி கமெரா மற்றும் 64 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்களை உடைய இரு பிரதான கமெராக்களையும் கொண்டுள்ளது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்