விரைவில் அறிமுகமாகிறது Google Pixel 2, Pixel 2 XL

Report Print Fathima Fathima in மொபைல்
72Shares
72Shares
lankasrimarket.com

புத்தம் புதிய அம்சங்களுடன் கூகுளின் புதிய ஸ்மார்ட்போன் Pixel 2, Pixel 2 XL போன்கள் வருகிற அக்டோபர் 4ம் திகதி வெளியாகும் என தெரியவந்துள்ளது.

சமீபத்தில் iPhone 8 மற்றும் iPhons X ஸ்மார்ட்போன்கள் வெளியாகின.

இந்நிலையில் அதிக திறன் மிக்க கமெரா, துல்லியமான வாய்ஸ் அசிஸ்டெண்ட், அதிக மெமரியுடன் கூகுள் புதிய போனை அறிமுகம் செய்யவுள்ளது.

கடந்தாண்டு அக்டோபர் 4ம் திகதி Google Pixel போன் வெளியானது, இதைப்போன்று Pixel 2, Pixel 2 XL போன்கள் இந்தாண்டு வெளியாகவுள்ளன.

இதுதொடர்பாக யூடியூப் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது, அன்றாடம் ஸ்மார்ட்போனால் சந்திக்கும் பிரச்சனைகள் கேள்விகளாக கேட்கப்படுகின்றன.

தொடர்ந்து ஸ்மார்ட்போனை மாற்ற விரும்புகிறீர்களா? என்பதுடன் அக்டோபர் 4 வரை காத்திருங்கள் என்பது போல் முடிகிறது.

ஆனால் எங்கே? எந்நேரத்தில் வெளியாகும் என்பது குறித்து அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்